Monday, October 12, 2015

Abirami Pattar & Astronomical Miracle… அபிராமி பட்டரும் விண்வெளி அதிசயமும் . . .


In ancient days, there was a temple, called Thirukadaiyur, at Thanajavur in Tamilnadu.
There, Abirami pattar was a temple assistant.
He has unlimited devotion on the temple Deity, Abirami Amman.
One day, King of that area came to that temple. That day was a no moon day.
King casually asked Abirami pattar, what was that day?
He replied that, it was a full moon day.
The King instructed his guards, to return to the palace if full moon comes in the night and if full moon not comes, he ordered to cut his head.
After king left the place, the nearby people explained Abirami pattar about what had happened.
Fear on life came to Abirami pattar. He surrendered to the deity, Abirami Amman, and sang by thinking on her, with tear full eyes.
Night came. Full moon also came. The King hurriedly came and requested Abirami pattar to forgive him.
Abirami pattar shed tears with bliss and thanked Abirami Amman.
Today’s Astronomical studies say that, once in 25000 years, there will be 3 consecutive full moon days.
i.e., the full moon – no moon – full moon cycle will break once.
How this was known to Abirami pattar, who wrote Abirami Anthathi?
Let the researchers explain, how much ancient our Tamil culture was.

முன்னொரு காலத்தில் தஞ்சாவூரில் திருக்கடையூர் என்ற கோவில் இருந்தது. அங்கு அபிராமி பட்டர் என்பவர் அந்த கோவிலில் உதவியாளராக இருந்தார். அவருக்கு அந்த கோவில் தெய்வமான அபிராமி அம்மன் மீது அளவற்ற பக்தி.
ஒரு நாள் அப்பகுதியை ஆண்ட மன்னன் அந்த கோயிலுக்கு வந்தான். அன்று அம்மாவாசை தினம். அந்த மன்னன் யதார்த்தமாக அபிராமி பட்டரிடம் இன்று என்ன திதி (தேதி) என்று கேட்டார். அபிராமி பட்டர் இன்று பெளர்ணமி திதி என்று கூறிவிட்டார்.
மன்னன் தன்னுடன் வந்த காவலர்களிடம் இன்று இரவு முழுநிலவு வந்தால் நீங்கள் அரண்மனைக்கு வந்துவிடுங்கள். அப்படி முழுநிலவு வராவிட்டால் இவரை சிரச்சேதம் செய்துவிடுங்கள் என உத்தரவிட்டார்.
மன்னன் போனதும் அருகில் இருந்தவர்கள் அபிராமி பட்டரிடம் நிகழ்ந்த சம்பவத்தை உணர வைத்தனர். அவருக்கு உயிர் பயம் வந்துவிட்டது. அபிராமி பட்டர் அபிராமி அம்மனை சரணடைந்து அவளை நினைத்து கண்ணீர் பெருக பாடினார்.
இரவு வந்தது பெளர்ணமி வந்தது. மன்னன் அலறியடித்து ஓடி வந்து அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கேட்டார். அபிராமி பட்டர் ஆனந்த கண்ணீர் சிந்தினார். அம்மனுக்கு நன்றி கூறினார்.
இன்றைய நவீன வானியல் ஆய்வுகள் கூறுவது என்னவென்றால் 25000 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக மூன்று பெளர்ணமிகள் வரும். அதாவது பவுர்ணமி-அமாவாசை-பவுர்ணமி என்ற சுழர்சி ஒரு முறை மட்டும் உடையும்.
இது எப்படி அபிராமி பட்டருக்கும் அபிராமி அந்தாதி எழுதியவருக்கும் தெரிந்தது ?
நமது தமிழ் பண்பாட்டின் தொன்மை எந்த அளவு இருக்கிறது என ஆராய்ச்சிகள் தெளிவு படுத்தட்டும்.
-தமிழன் வருவான். . .



No comments:

Post a Comment