Sunday, September 27, 2020

வெள்ளி மற்றும்

"வியாபார மந்தம் நீங்கி செழிப்பு ஏற்ப்பட""...🏵🏵🏵

#Sundarji
#Suryatrust

வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து அதில் கொஞ்சம் பன்னீரும் ஒரு ஏலக்காயும் போட்டு உங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை

 "ஓம் ஸ்ரீம் .................தெய்வத்தின் பெயர் சேர்த்து 108"முறை

 ஜெபித்தப்படி கிழக்கு திசையில் ஆரம்பித்து எல்லா திசைகளிலும் அந்த நீரை தெளித்து விடவும் கண் திருஷ்டி எதிரிகளின் கெட்ட எண்ணங்கள் நீங்கி தொழில் விருக்திஅடையும்  மீதமுள்ள நீரைக்கொண்டு முகம் கழுவவும்..

இதை காலை 9 to 10"மணிக்குள்ளும் அல்லது மாலை"6 முதல் 7.30"வரைக்குள் செய்து முடிக்கவும் 
#Sundarji

Friday, September 25, 2020

பனகிழங்கு சாப்பிட்ட அனுபவம்

பிஸ்கெட் என்பார்!
பர்கர் என்பார்!

பனங்கிழங்கின்!
ருசியறியாதோர்...!!!

பனகிழங்கு  சாப்பிட்ட அனுபவம் ....???

Wednesday, September 23, 2020

இவருக்கு கோபம் என்பதே வராது.

🕉️காசியபர் என்ற முனிவர் அசுரர்களின் தந்தை. இவர் பிரம்மனின் மகன். பெரும் தெய்வபக்தி கொண்டவர்.

 இவருக்கு கோபம் என்பதே வராது. சத்தியத்தைக் கடைபிடிப்பவர். நல்ல குணங்கள் கொண்ட காசியபருக்கு திதி என்ற மனைவி இருந்தாள். இவர்களுக்கு 66 கோடி குழந்தைகள். அனைவரும் அசுர குணம் கொண்டவர்கள். இருந்தாலும் பெற்றோருக்கு பிள்ளைகள் அல்லவா? அசுரக்குழந்தைகளின் தலைவனாக அசுரேந்திரன் என்பவனை நியமித்தார். 
அசுரேந்திரன் மங்களகேசினி என்பவளை மணந்து சுரசை என்ற மகளைப் பெற்றான். அவளுக்கு அசுர குருவான சுக்கிராச்சாரியார் பல வித்தைகளை கற்றுக்கொடுத்தார். மாயை என்ற பெயரையும் சூட்டினார். சுக்கராச்சாரியாருக்கு அசுரர்களின் நிலை குறித்து கவலை ஏற்பட்டது. தேவர்களைவிட அவர்கள் குறைந்த வலிமையுடன் இருந்தனர். 

🔥தேவர்களிடம் தோற்றுப்போவதே அசுரர்களுக்கு வாடிக்கையாக இருந்தது. எனவே தேவர்களை அடக்கி ஆளும் வல்லமையை பெற்று, அசுரகுலத்தின் பெருமையை உயர்த்த முடிவுசெய்தார். மாயையால் இதை செய்ய முடியும் என நம்பினார். ஆண்களால் செய்ய முடியாத ஒன்றை பெண்களைக்கொண்டு சாதிப்பது எந்தக் காலத்திலும் கைவந்த கலை தானே!.

 💦காசியப முனிவரை சந்தித்து அவர் மூலமாக ஏராளமான அசுரகுழந்தைகளை உற்பத்தி செய்து நம் குலத்தின் பெருமையை உயர்த்த வேண்டும். அந்தக் குழந்தைகள்தான் 66 கோடி அசுரர்களையும் பாதுகாக்க வேண்டும். காசியபர் மிகவும் நல்லவர் என்பதால் அவர் மூலம் பிறக்கும் குழந்தைகள் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள் என மாயைக்கு சுக்கிராச்சாரியார் யோசனை சொன்னார். 

மாயை பெற்றோரிடம் அனுமதி பெற்று காசியபர் வசிக்கும் காட்டிற்கு சென்றாள். காட்டின் ஒரு பகுதியை அழித்து மலர்செடிகள், மரங்கள், நீரோடை, உயரமான மண்டபங்கள் கொண்ட ஒரு அரண்மனையை தன் சக்தியால் உருவாக்கினாள். அங்கு காசியபர் வந்தார். 

அவருக்கு நட்ட நடு காட்டில் இருந்த அரண்மனை பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இதை உருவாக்கியது யார் என பார்ப்பதற்காக அரண்மனைக்குள் சென்றார். உள்ளே மாயை அழகே வடிவாக அமர்ந்திருந்தாள்.

💦மாயையிடம், நட்ட நடு காட்டில் பயமின்றி அரண்மனை அமைத்து தங்கியிருக்கும் நீ யார்? என கேட்டார். அதற்கு அவள், நான் இந்த காட்டுப்பகுதியில் மன அமைதி தேடி வந்தவள். தனிமையாகவே இங்கு வசிக்கிறேன் என்றாள். அவளது அழகை காசியபர் மிகவும் புகழ்ந்தார். தவத்தில் சிறந்த முனிவரான நீங்கள் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்திருக்கும் நிலையில் தனியாக இருக்கும் ஒரு பெண்ணின் அழகைப் புகழலாமா? 

🙏இது உங்கள் தவத்திற்கு இழுக்கை ஏற்படுத்தாதா? என கேட்டாள் மாயை. காசியபர் காதில் எதுவும் விழவில்லை. அந்தப் பெண்ணை திருமணம் செய்துவிட வேண்டும் என்பதில் மும்முரமாக இருந்தார். அப்போது மாயை ஒரு நிபந்தனை விதித்தாள். இந்த வயதான ரூபத்தில் இருந்தால் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன். என் வயதுக்கு தக்கபடி ஒரு ராஜகுமாரன்போல உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் என்றாள். காசியபரும் அவள் சொன்னபடி உரு மாறினார். அவர்களுக்கு முதலில் பிறந்தவனே சூரபத்மன்.

 ...இதைத் தொடர்ந்து அவர்களின் வியர்வை துளியிலிருந்து 30 ஆயிரம் அசுர படைவீரர்கள் உருவானார்கள். மேலும் சிங்க முகம் கொண்ட சிம்மபத்ரன் என்பவனும் அவனோடு 40 ஆயிரம் படைவீரர்களும், யானைமுகம் கொண்ட தாரகன் என்பவனும், அவனோடு 40 ஆயிரம் படைவீரர்களும் உற்பத்தி ஆனார்கள். ஆட்டின் முகம் கொண்ட கஜாமுகி என்ற பெண்ணும் அவளோடு 30 ஆயிரம் வீரர்களும் பிறந்தனர். இதனால் உலகில் அசுரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தங்களது புத்திரசெல்வங்களை பார்த்து காசியபரும், மாயையும் ஆனந்தம் கொண்டனர். ஒருநாள் பத்மாசுரன், 

🗿ஒரே நேரத்தில் இவ்வளவு அசுரர்களை எதற்காக பெற்றீர்கள்? நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என காசியபரிடம் கேட்டான். அவர் தன் குழந்தைகள் அனைவரையும் அழைத்து, அனைவருமே சிவனின் அருளைப் பெற தவம் செய்யுங்கள்.  தானம் தர்மம் செய்யுங்கள். தர்மம் தவறாமல் வாழ்ந்துகாட்டுங்கள். எல்லா ஜீவன்களிடத்திலும் அன்பு செலுத்துங்கள் என கூறினார். இதைக்கேட்ட மாயை ஆத்திரம் அடைந்தாள். 

👀அவள் தன் சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தாள். உங்கள் தந்தை சொன்ன எதையும் நீங்கள் செய்ய வேண்டாம். அவர் தன்னைப்போலவே உங்களையும் முனிவர்கள் போல் ஆக்க முயற்சி செய்கிறார். இதனால் உங்கள் வாழ்க்கை இனிக்காது. நீங்கள் வீரர்களாக வளர வேண்டும். ஏராளமான செல்வம் சேர்க்க வேண்டும்.

🦚புகழுடன் வாழ வீரமும், செல்வமுமே பிரதானமானது. எனவே நீங்கள் சிவபெருமானை நினைத்து தவம் இருந்து, உங்கள் வீரத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களை யாரும் அழிக்காமல் இருக்க வரம் பெற்று வாருங்கள். அதன்பிறகு அசுரகுலமே உலகில் உயர்ந்தது என்பதை உணர்த்துங்கள் என்று கட்டளையிட்டு விட்டு, 

🦚தான் யார் என்ற உண்மையை காசியபரிடம் தெரிவித்தாள். காசியபருக்கு அப்போதுதான், தாம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டோம் என்பது புரிந்தது. அவர் தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் வேண்டி, தவமிருக்க சென்றுவிட்டார். அதன்பிறகு அசுர குமாரர்கள் எல்லாம் சூரபத்மனின் தலைமையில் தவம் இருந்தனர். தங்களைச் சுற்றி 108 அக்கினி குண்டங்களை உருவாக்கினர். ஏராளமான தானியங்களைக் கொண்டு யாகம் செய்தனர். தவத்தை தொடர்ந்து நடத்தினர். ஆனால் சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றவில்லை. எனவே சூரபத்மன் தீக்குள் குதிக்க முயன்றான். அப்போது சிவபெருமான் தோன்றி சூரபத்மனை தடுத்து நிறுத்தி தனது சக்தியைத் தவிர வேறு யாராலும் அசுரகுலத்தை அழிக்க முடியாது என வரம் தந்தார். 

🌸அதன்பிறகு சூரர்களின் அட்டகாசம் அதிகரித்தது. பிரம்மா, விஷ்ணு ஆகியோர் கூட அவரவர் தொழிலை செய்ய முடியவில்லை. அனைவரும் வரம் கொடுத்த சிவனிடமே முறையிட்டனர். அவர் அசுரகுலத்திற்கு முடிவுகட்ட நேரம் வந்துவிட்டதை அவர்களிடம் உணர்த்தி, தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உருவாக்கினார். சரவணப் பொய்கை என்ற குளத்தில் அந்த பொறிகள் போய் விழுந்தன. ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக வடிவெடுத்தன. 

🦚அந்த குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் தாலாட்டி வளர்த்தனர். பார்வதிதேவி அந்த குழந்தைகளை ஒன்று சேர்த்து கந்தன் என பெயர் சூட்டினாள். ஸ்கந்தன் என்றால் ஒன்று சேர்க்கப்பட்டவன் என்று பொருள். கந்தனுக்கு முருகன் என்ற பெயரும் உண்டாயிற்று. அழகாக இருந்ததால் முருகன் என பெயர்பெற்றார். அவருடன் வீரபாகு தலைமையில் லட்சம் வீரர்கள் போர்செய்ய சென்றனர். வீரபாகு பார்வதியின் கொலுசு மணியில் இருந்து உருவானவன். அவனை தனது படையின் சேனாதிபதி ஆக்கினார் முருகன்.

 🦚அனைவரும் சூரபத்மனையும் அவனது சகோதரர்களையும் எல்லா அசுரர்களையும் கொன்று குவித்தனர். சூரனை இரண்டாகப் பிளந்து, ஒரு புறத்தை சேவலாகவும், ஒரு புறத்தை மயிலாகவும் மாற்றினார். மயிலை தன் வாகனமாகவும், சேவலை தன் கொடியின் சின்னமாகவும் கொண்டார். ஐப்பசி மாதம் சஷ்டி நாளில் இந்த வதம் நிகழ்ந்தது.