Friday, January 23, 2015

இது மதுரையில் உள்ள பார்வை அற்றோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி...




இது மதுரையில் உள்ள பார்வை அற்றோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி...

இங்கு நம் அறக்கட்டளை சார்பாக என்ன சேவை தேவை என்று நம் மாற்றுதிறனாளியான பெண் அறங்காவலர் தானாகவே முன்வந்து அங்கு நேரில் சென்று கேட்டார். 

அவர்கள் ஒரு வேலை அறுசுவை உணவுக்கு ஏற்பாடு செய்தாலே மிக்க சந்தோஷம் என்று சொன்னார்கள்.

அதன்படி நம் அறக்கட்டளையின் மதுரை மாற்றுதிறனாளியான பெண் அறங்காவலரே முயற்சி எடுத்து செயல்படுத்தி நம்மை பிரமிக்க வைத்துவிட்டார்.

அவருக்கே உதவி தேவைப்படும் நிலையில் உள்ள நம் மாற்றுத்திறனாளி பெண் அறங்காவலர் அவர்களைப்பார்த்து (பார்வை அற்றோர்களை) பாவம் என்று சொல்வதை கேட்கும்போது என்ன சொல்வது . . .?

அவர்கள் கஷ்டம் அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால்தான் தெரிகிறது...

மற்ற அறங்காவலர்கள் உதவி இன்றி தானாவே முயற்சி எடுத்து இந்த சேவையை செய்துவிட்டு வந்துதான் நமக்கு தெரியப்படுத்தினார். சேவை செய்பவரை என்ன சொல்ல?

இது நிச்சயமாக நம் அறகட்டளை விளம்பரத்திற்காக அல்ல. 

அப்படிப்பட்ட விளம்பரம் நம் அறக்கட்டளைக்கு தேவையும் இல்லை.

அதனால் தயவு செய்து இதை தவறாக பயன்படுத்தி விடவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது..

நாம் அவர்களுக்கு (மாற்றுதிறனாளிகளுக்கு) உதவி செய்யவில்லை என்றாலும் இடைஞ்சலாகிவிடக்கூடாது என்பதில் நாம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.

அப்புறம் ஏன் இந்த பதிவு என்று கேட்கறீர்களா?

சில மாதங்களுக்கு முன் இங்க வந்த சென்னையை சேர்ந்த ஒரு கோடீஸ்வரர் மற்றும் ஓய்வு பெற்ற பெரிய அரசு அதிகாரி (ரா.கி) இது குழந்தைகள் கையில் இருக்கிறது, தன்னை மதிக்க வில்லை என்று சொல்லிச்சென்றார். (இது யாரையும் மதிக்க தொடங்கப்பட்டது இல்லை. சேவை செய்ய தொடங்கப்பட்டது) 

இப்படிப்பட்ட நல்ல இரக்க குணம் படைத்த பாசக்கார குழந்தை (நம் மாற்று திறனாளி பெண் அறங்காவலர்) கையில் நம் சேவை அறக்கட்டளை நிர்வாகம் இருப்பதை நாங்கள் பெருமையாகவே கருதுகிறோம் என்பதை வெளிப்படுத்தவே.

No comments:

Post a Comment