பொங்கல் களைகட்டுகிறது,
அதே போல் விலைவாசிகளும் எகுறுகிறது...
கரும்பு முதல் கருப்பட்டி வரை,
அரிசி முதல் அருகம்புல் வரை,
அத்தனையும் அதிகம் தான்...
மழை இல்லை என்று ஒற்றை வார்த்தையில் கூறிவிட முடியாது,
ஒரு நிமிடத்திற்கு ஒரு மரம் வெட்டபடுகின்றது,
ஒரு நாளைக்கு ஒரு விளைநிலம் ப்ளாட்டாக மாறுகிறது,
ஒரு வாரத்திற்கு ஒரு கிணறு மூடப்படுகிறது..
உன் அறிவியலை கொண்டு ஒரு நெல்மணி கூட உருவாக்க முடியாது என்பதை நினைவில் கொள்..
மின்சார அடுப்பில் தான் கொண்டாட வேண்டும் என்றால்
காணும் பொங்கல் எதற்கு,
மாட்டின் வாசனை கூட தெரியாதவர்களுக்கு,
மாட்டுப் பொங்கல் எதற்கு,
தினம் விவசாயி செத்து மடியும் நாட்டில்,
உழவர் திருநாள் எதற்கு,
தமிழை இழிவாக நினைப்பவர்களுக்கு
தமிழர் பண்டிகை எதற்கு...
சம்பிரதாயத்திற்காக கொண்டாடாதே...
சகலமும் சூழ கொண்டாடு...
அதுவே தமிழர் மாண்பு...
விவசாயத்தை மதிக்க கற்றுக்கொள்,
முடிந்தால் விவசாயியாய் மாறி கற்றுக்கொள்..
No comments:
Post a Comment