Tuesday, January 6, 2015

வேட்டி தினம்

வேட்டி தினம் & தாவணி தினம் (13/01/2015 , 14/01/2015) கடந்த வருடம் திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்., (இந்திய ஆட்சிப்பணி) அவர்கள் குறிப்பிட்டுள்ள வேட்டி தினம் சனவரி இரண்டாம் வாரம் முழுவதும் கொண்டாட பட்டது. பெரியோர் மட்டுமல்லாது இளைஞர்களிடம் பெரிய வரவேற்பு ஏற்றுள்ளது. இது மிகப்பெரிய வெற்றியாகும்.இந்த வருடம் அவர் அந்த இடத்தில் இல்லாவிட்டாலும், அவர் வழிநின்று நாம் நடத்துவோம் .. கலாச்சாரத்தை உயர்த்துவோம்.... வேட்டி தினம் & தாவணி தினத்தில் முழுமையான வெற்றி பெற :::: * வேட்டி மற்றும் தாவணி அணிவது இந்த வெற்றியை நிர்ணயிக்கிறது, அதை நிர்ணயிப்பது நாம் அணியும் வேட்டி மற்றும் தாவணி நெசவாளர் கையால் நெய்த வேட்டியாக இருக்க வேண்டும், அனைத்து ஆலைகளில் தயாரிக்கும் வேட்டி மற்றும் தாவணிகளிலும் உழைப்பு இருக்கிறது ஆனால் அங்கே உழைப்பு சுரண்டப்படுகிறது, எனவே நீங்கள் அணியும் வேட்டி மற்றும் தாவணி ஒரு நெசவாளரின் வீட்டில் ஒளி ஏற்றவேண்டும். * நீங்கள் ஒன்றுகூடி பேசி முடிவெடுக்க வேண்டும். * உங்கள் தோழன் அல்லது தோழி முதல் முறையாக வேட்டி மற்றும் தாவணி கட்டினால் அவர்களை கிண்டலடிக்காமல் ஊக்குவிக்கவும், இன்னொருவர் உங்களால் வேட்டி மற்றும் தாவணி கட்ட முன்வந்தால் அதுவே முழு வெற்றியாகும்... வேட்டி கட்டினால் தான் தமிழன் கலாச்சாரம் என்பதில்லை, தமிழன் கலாச்சாரம் எதையும் இழந்துவிடவில்லை என்பதை உலகிற்கு காண்பிப்போம்... ஒத்துழைக்க தயாராகும் அணைத்து தோழர்களுக்கும் தலை வணங்குகிறேன்... - தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு.

No comments:

Post a Comment