மங்குனி அமைச்சர்:
மன்னா! தங்களைக் காணONGC நிறுவனத்திலிருந்துசிலர் வந்துள்ளார்கள்.
24ம் புலிகேசி . . .:
என்ன விஷயம் அமைச்சரே!
தஞ்சை டெல்டா பகுதியில்மீத்தேன் எடுப்பது தொடர்பாக தங்களின் அனுமதி வேண்டுமாம்.
தேன் காட்டில்தானே கிடைக்கும் .அதற்கு ஏன் தஞ்சைக்கு போக வேண்டும் ?
மன்னா!
இது தேன் இல்லை .இது வாயு
.வாயுவா? மங்குனி அமைச்சரே!வாயுவை எப்படி பிடிக்க முடியும் ?
ஐயோ மன்னா!
இது நீங்கள் வெளியேற்றும் வாயு இல்லை.இது ஒரு வகையான எரிவாயு.
ம்ம்ம் ... விளக்கமாக சொல்லும் அமைச்சரே!
தஞ்சை டெல்டா பகுதியில் பூமிக்கடியில் ஏராளமான மீத்தேன் எரிவாயு இருக்கிறதாம். பூமியில் ராட்சச ஆழ்துளை கிணறுகள் அமைத்து , பூமிக்கடியில் உள்ள தண்ணீரை எல்லாம் எடுத்துவிட்டு ,பாறைகளுக்கு இடையே உள்ள மீத்தேன் வாயுவை எடுப்பது.
அது இருக்கட்டும் . இதனால் நமக்கு என்ன கிடைக்கும் ?
அதையெல்லாம் நான் பேசிவிட்டேன் மன்னரே. நமக்கு வர வேண்டியது நமக்கு வந்து சேரும் .
பிறகு ஏன் தாமதம் ? உடனே வேலையை ஆரம்பிக்க சொல்லும்.
ஆனால் அதில் ஒரு சிக்கல் மன்னா.
என்ன சிக்கல் அமைச்சரே?
விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்.விவசாயிகள் அனைவரும் விவசாயம் செய்யமுடியாது. சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் போய் விடும் மன்னா.
அதற்குத்தான் வால்மாட் போன்ற நிறுவனங்கள் இருக்கிறதே ,அவர்களை, எல்லா ஊர்களிலும் கடைகளை திறக்க வைத்தால், நமது மக்கள் அவர்களிடமே உணவுப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். நாமும் அவர்களிடம் இருந்து நமது பங்கை வாங்கிக் கொள்ளலாம்.
மன்னா! அப்படி செய்தால் சிறு வியாபாரிகள் தங்களது கடைகளை மூட வேண்டி வரும்.
அதனாலென்ன... மூடிவிட்டு வால்மாட்டில் வேலைக்கு சேர்ந்து கொள்ளட்டும். நமக்கு நமது நலன் தான் முக்கியம். அரண்மனை கஜானா நிறைந்தால் போதும்.
மன்னா! இப்படியே செய்தால் அடுத்த தேர்தலில் மக்கள் நம்மை ஆதரிக்க மாட்டார்கள்.
எவ்வளவு பணம் சேர்க்க முடியுமோ, அவ்வளவு பணத்தையும் சேர்த்துவிட்டு, தேர்தல் நேரத்தில் சிறுபகுதியை ஓட்டுக்கு கொடுத்தால் ,நமக்கே ஓட்டு போட்டு விடுவார்கள் அமைச்சரே.
அதுபோக, தேர்தல் நேரத்தில் ஏதாவது கவர்ச்சிகரமாக இலவசம் அறிவித்தால் போதும்.அடுத்தும் அரியணை நமக்குத்தான் அமைச்சரே.
ஆக , பன்னாட்டு நிறுவனங்களிடம் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு ,தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்தித்து ஏதாவது பொய் சொல்லி ஓட்டு வங்கி விடலாம் என்று சொல்கிறீர்.
க.. க.. க ..போ......
பிங்குறிப்பு:
பெண்கள் இலவசத்துக்கும்,
ஆண்கள் குவாட்டருக்கும், கோழி பிரியாணிக்கும், ஆயிரம் ரூபாய்க்கும் ஆசைப்பட்டால் அனுபவித்துதான் ஆகவேண்டும்.
No comments:
Post a Comment