Friday, January 2, 2015
ஆசிரியர் ஒருவர்
ஆசிரியர் ஒருவர் கணினி வகுப்பு நடத்தி கொண்டிருக்கும் போது திடிரென்று மாணவன் ஒருவன் எழுந்து ,'கம்ப்யூட்டர் ஆணா இல்ல பெண்ணா என்று கேட்டான் .
ஆசிரியருக்கு பதில் தெரியவில்லை . மொழி அகராதியிலும் இதற்கான விடை இல்லை. எனவே, வகுப்பிலுள்ள மாணவர்களை ஒரு குழுவாகவும் , மாணவிகளை இன்னொரு குழுவாகவும் பிரித்து,இதற்கான விடையை கண்டுபிடியுங்கள் என்றார். நீங்கள் சொல்லும் விடையை நிருபிக்கும் வகையில் நான்கு உதாரணங்களையும் கூற வேண்டும் என்றார்.
இரண்டு குழுக்களும் தனித்தனியாக கூடி கம்ப்யூட்டர் குறித்து ஆராய்ச்சி செய்தது. பின்னர் மாணவியர் அனைவரும், 'கம்ப்யூட்டர் ஆண் இனத்தை சேர்ந்தது' என்றும், மாணவர்கள் அனைவரும்,'கம்ப்யூட்டர் ஒரு பெண்' என்றும் கூறினர். அதற்கு அவர்கள் கூறிய விளக்கம் என்ன தெரியுமா???
மாணவியர் கூறிய விடை:
கம்ப்யூட்டரில் ஏதாவது வேலை செய்ய வேண்டுமெனில் முதலில் அதை , 'பவர் ஆன்' செய்தல் வேண்டும்
ஏகப்பட்ட தகவல் தொகுப்புகள் கம்ப்யூட்டரில் உள்ளன , இருந்தாலும் கம்ப்யூட்டர்கள் தாங்களே சுயமாக சிந்திக்க முடியாதவை
கம்ப்யூட்டர்கள் பிரச்சனைகளை தீர்க்க உதவினாலும், பல நேரங்களில் அவையே பிரச்சனைகளாக அமைகின்றன.
ஒரு கம்ப்யூட்டர் வாங்கிய உடன் யோசிப்போம்...'ஐயோ.. சிறிது காலம் பொறுத்திருந்தால், அதை விட சிறந்த கம்ப்யூட்டராக வாங்கியிருக்கலாமே'...என்று!
இந்த காரணங்களால் கம்ப்யூட்டர் ஆண் இனத்தை சேர்ந்தது தான் என்று மாணவிகள் முடிவு கூறினர்.
கம்ப்யூட்டர் பெண்ணுக்குத் தான் சமம் என்பது மாணவர்களின் கருத்து. அதற்கு அவர்கள் கூறும் காரணம் என்ன தெரியுமா?
கம்ப்யூட்டரின் தொழில்நுட்பம் அதை உருவாக்கியவரை தவிர யாருக்கும் எளிதில் புரிவதில்லை.
ஒரு கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் சாப்ட்வேரை, இன்னொரு கம்ப்யூட்டரில் எளிதில் பயன்படுத்தி விட முடியாது. அதாவது, கம்ப்யூட்டருக்கு கம்ப்யூட்டர் பயன்பாடுகள் மாறுபடும்.
நாம் செய்யும் சிறு தவறுகள் கூட கம்ப்யூட்டர் நினைவில் பதித்திருக்கும். நெடு நாட்களுக்கு பிறகு கூட அதைத் திரும்ப எடுத்துக் கூறும் ஆற்றல் அதற்கு உண்டு.
ஒரு கம்ப்யூட்டரை வாங்கிய உடனே , தொடர்ந்து மாத வருமானத்தில் பாதி பணம் அந்த கம்ப்யூட்டரின் மற்ற பாகங்களை வாங்க செலவு செய்ய வேண்டியிருக்கும்
இந்த காரணங்களால் கம்ப்யூட்டர் பெண் தான் என்று மாணவர்கள் முடிவு கூறினர்.
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நண்பர்களே உங்கள் அனுமானம் என்னவோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment