Tuesday, January 13, 2015

பழையது

பழையன கழிதலும் புதியன புகுதலென
பழந் தமிழன் சொன்ன சொல்லை
தலையென சிரமதி லேற்றி
தழைத்து வளர்ந்ததே போகி..

தீயவற்றைக் தீயினில் கொளுத்திடவே
தாய் தமிழன் சொன்னதடா...

வாய்மொழிப் பொருள் உணர்ந்து
தாய் பூமியதைக் காத்திடடா.

உள்ளிருக்கும் அழுக்கை எல்லாம்
உன் மனதினுள் புதைத்துவிட்டு
ஊரைத் தீக்கிரை யாக்கி நீ
உணர்ந்த தென்ன சொல் மனிதா??

தீர்ந்து போன பொருளையெல்லாம்
தீயினிலே போட்டுத் தீய்க்காமல்
தீய மதவாதத்தையும் தீராத சாதியையும்
தீவிரவாதத்தையும் தீயினிலிலே நீயிடடா.

இல்லாதோர்க்கு பகிர்ந்து கொடு
இயலாதவர்க்கு முயன்று கொடு
இருப்பதை விரும்பி கொடு
இல்லை யென்ற சொல்லை விடு.

புகை யிலிட்டு கொளுத்துவதால்
புது வாழ்வு வருவதில்லை.
பகை யொன்றே மிஞ்சுமடா
பார் விசமாய் மாறுமடா.

புன்னகைப் பூக்களையே தினம்
பூமியில் நாம் விதைப்போம்

புகை யில்லா போகி யதை இந்த
பூமியில் அழகாய் விளைவிப்போம்.

No comments:

Post a Comment