Tuesday, January 13, 2015

கல்வி இனி என்ன செய்ய வேண்டும் நாம்?

தமிழ்நாட்டில் மட்டும் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழில்நுட்ப மாணவர்கள் (Engineers) தொழில்நுட்ப்பக்கல்லூரிகள்ல இருந்து வெளிய வர்றாங்க. அப்படி வருபவர்களில் பாதிக்கும் மேல் வேலை கிடைக்காமல் ஒரு வருடமோ இரண்டு வருடமோ தேடல்லயே தொலைக்க வேண்டி இருக்கு. இதுக்கு என்ன காரணம்ணு என்னைக்காவது யோசித்துப்பார்த்தோமா?

அப்படியே வேலை கிடைச்சாலும் சம்பளமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்குறது இல்லை. அதில் பாதிபேர் படிச்ச பாதையை விட்டுட்டு வேற பாதைல போயிடுறாங்க. இதெல்லாம் ஏன் நடக்குது?

இதை எப்படி மாற்றலாம்னு என்னைக்காவது யோசிச்சு பாத்துருக்கோமா?

இதை மாணவர்களிடம் கேட்டா சொல்ற பதில் 'Education System' சரி இல்லை..நான் படிச்ச காலேஜ் சரி இல்லை அப்படி இப்படீனு சில காரணங்கள் சொல்லுவாங்க...

கல்லூரிகளிடம் கேட்டால்...சரிவிடுங்க அவங்க கேக்குறதே தேவையில்லாத்துதான் ஏன்னா பெரும்பாலும் அவங்க செயல்படும் விதமே கல்லூரிகளெல்லாம் வியாபாரமாகி விட்ட விஷயம்தான் அப்படீன்னு சொல்லாமல் சொல்லுது...

அதுவே சமூக ஆர்வலரிடம் கேட்டால்..இந்த அரசு சரி இல்லை...கல்லூரிகளை சரிய கட்டுப்படுத்துவது இல்லை என்று பதில் வரும்...

சரிங்க இவங்க சொல்றது எல்லாமே சரிதான் ஆனா அதுக்காக நாம இதெல்லாம் சரியாகும் வரை காத்துக்கொண்டே இருக்க முடியுமா?

கட்டாயம் முடியாதுதானே. சரி என்ன பண்ணலாம்?

உலகம் உங்கள் வீட்டு வரவேற்பறைக்கு வரும் காலம் இது. அந்த வளர்ச்சியை சரியாக உபயோகப்படுத்தினால் சரியாக முன்னேறமுடியும். ஆனால் அந்த முன்னேற்றங்களுக்கெல்லாம் தடையாக நிறைய விஷயங்கள் நமக்கு முன்னே முன்னிருத்தப்பட்டிருக்கின்றன.

சரி முதலில் மாணவர்களிடமிருந்தே தொடங்குவோம்..

எந்த கல்லூரியில் படித்தாலும் உலக அறிவை வளர்த்துக்கொண்டால் போதும்...உலக அறிவை வளர்ப்பது என்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை பன்னிடன்டாம் வகுப்பு கணித பாடத்தைவிட இது எளிதுதான்...

அதற்காக கல்லூரி வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்காமல் சதா சர்வகாலமும் படித்துக்கொண்டே இப்படிஅறிவை வளர்த்துக்கொண்டே இருங்கள் என்று கூறவில்லை அப்படி நான் கூறினால் அதைவிட முட்டள்தனமான விஷயம் வேறு இருக்கவே முடியாது..

கல்லூரியில் நல்லா Enjoy பண்ணுங்க. ஆனா ஒரு நாளைக்கு ஒரே ஒரு மணி நேரம் மட்டும் உங்கள் அறிவை வளர்க்க செலவழித்துப்பாடுங்கள் அப்போ தெரியும் அதொட வலிமை என்ன என்று. அதேபோல் இந்த அறிவுத்தேடலையும் உங்கள் பொழுதுபோக்கிலேயே வைத்துப்பாருங்கள்...

அதுதான் முக்கியம் நீங்கள் செய்வதை ரசித்து செய்யுங்கள்...

வாருங்கள் ஒரு எடுத்துக்காட்டை பார்ப்போம்...

நீங்கள் கணினி பயிலும் மாணவர் என வைத்துக்கொள்வோம் உங்களுக்கு 'சி' நிரலாக்கம் (C Programming) இருக்கிறது என்றால் முதலில் 'சி' நிரலை எங்கு உபயோகப்படுத்துவார்கள் என்பதைப்படியுங்கள்...

பின் உங்களின் எதாவது ஒரு நிஜ உலகத்துடன் தொடர்பு படுத்திப்பாருங்கள்....உங்கள் அம்மாவின் மாதாந்திர பட்ஜெட்டை 'சி' இல் ஒரு நிரலில் எழுதிக் கொடுங்கள்...

'LOVE METER' நிரல் எழுதி நண்பர்களுடன் ஜாலியாய் அரட்டை அடியுங்கள்...

இது போல் செய்தால் நீங்கள் படித்தது மிக அதிகமாய் இருக்கும் ஆனால் படிக்கிறோம் என்ற சோம்பல் இல்லாமலே படித்து முடித்திருப்போம்...

இதேபோல் ஒவ்வொரு துறைக்கும் REAL WORLD உடன் தொடர்புபடுத்தி படியுங்கள்..உங்களால் எளிதாக படிக்க முடியும்...

மேலும் இணையத்தில் முகப்புத்தகம் தவிரவும் நிறைய நல்ல இணையதளங்கள் உள்ளது. அவற்றிற்கு வாருங்கள்.

நிறைய உங்களை வலைப்பூ எழுத உதவுகின்றது.. அவற்றை தேடுங்கள்...
நிறைய நிறையயயயய வாய்ப்புகள் உள்ளன

நண்பர்களே...வாருங்கள் சேர்ந்தே கலக்குவோம் இணையத்தை...

உங்களுக்குள் தேடல் என்ற ஒன்று மட்டும் இருந்தால் உங்களால் இந்த உலகை வெல்ல முடியும்.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், நானும் இப்படிப்பட்ட சூழலில் தான் படித்து வந்தேன்...

நம் கல்வி தொடர்பான பல கேள்விகள் கோபங்கள் என்னுள் இருந்தது யாராவது கல்விமுறையை மாற்ற மாட்டர்களா? என என்னினேன்

ஆனால் நாம் முதலில் மாறுவோம் என்ற முடிவுக்கு வந்து பின் மாறினேன்..

உங்களுக்கும் அதே மாதிரியான கேள்விகள் நியாயமான கோபங்கள் இருப்பது சரிதான்...

ஆனால் வெறும் கோபம் எதற்கும் உதவாது....கோபத்தை நாம் நேர்மறையான விசயங்களாக மாற்றவேண்டும்..

அதுதான் நம் வெற்றியின் வழி..
வாருங்கள் எல்லாவற்றையும் கற்கலாம்...

அடுத்தபதிவில் மேலும் தெரிந்து கொள்ளலாம் காத்திருங்கள்...

பசித்திருங்கள் அப்போதுதான் உணவு சுவைத்திருக்கும்...

--"ரெளத்ரம் பழகுவோம்"

No comments:

Post a Comment