Friday, January 30, 2015

இரண்டு நாட்களுக்கு முன்னால்,

இரண்டு நாட்களுக்கு முன்னால், ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன்.
போலீசார் வண்டியை நிறுத்த சொன்னார். 100 ரூபாய் அபராதம் கேட்டார். நான் கொடுத்து விட்டு ரசீது கேட்டேன்.
அதற்கு, தேவையில்லை என்றார் அவர். நான் கேட்டேன் ஒரு வேளை அடுத்த இடத்தில் இன்னொரு போலீசார் நிறுத்தினால்..?
அதற்கு அவர் "காக்கா" என்று சொல் விட்டுவிடுவார் என்றார். அன்று அதுபோல் காக்கா என்று சொல்லி இரண்டு பேரிடம் தப்பித்து வந்தேன்...
இன்று, வண்டியை நான் ஓட்டவில்லை, நண்பன் ஓட்டினான். இந்த முறையும் மாட்டிக்கொண்டோம். நண்பன் எவ்வளவு கெஞ்சிப்பார்த்தும் அவர் விடுவதாகயில்லை.
அந்த நேரம் எனக்கு மனத்தில் "காக்கா" என்ற வார்த்தை பட்டென்று பளிச்சிட்டது. நண்பன் காதில் காக்கா என்று சொல் என்றேன். அவனும் "காக்கா சார்..." என்றான்.
போலீசார் முகம் போனது பார்க்க வேண்டுமே, பிறகு அமைதியாக சொன்னார்...
டேய்...எங்ககிட்டேவா...நாங்க யாரு... தமிழ் நாடு போலீஸ அவ்வளவு சீக்ரமா ஏமாத்த முடியுமா.

No comments:

Post a Comment