Tuesday, December 9, 2025

தினம் ஒரு ஆலயம் - அதிசயம் 9. மங்களநாதர் திருக்கோயில் உத்திரகோசமங்கை



 

9.     மங்களநாதர் திருக்கோயில் உத்திரகோசமங்கை

உத்திரகோசமங்கை மங்களநாதர் கோயில், ராமேஸ்வரம் அருகே உள்ள பழமையான சிவன் கோயில்களில் ஒன்று,

உலகின் முதல் சிவன் கோயில் என்றும் கருதப்படுகிறது

மூலவர் மங்களநாதர் மற்றும் மங்களேசுவரி அம்மன் அருள்பாலிக்கின்றனர்.

இது கி.மு.270ல் பாண்டிய நெடுஞ்செழியனால் கட்டப்பட்டது என்று அறியப்படுகிறது.

இங்குள்ள நடராசமூர்த்தி ஆதிசிதம்பரேசர் என்றழைக்கப்படுகிறார். இங்குள்ள சபை இரத்தினசபை எனப்படுகிறது.

உத்திர கோச மங்கை என்று தற்காலத்தில் அறியப்பட்டாலும், இத்தலத்தின் முழுப் பெயர் 'திரு உத்திர கோச மங்கை' என்பதேயாகும். 'திரு' என்றால் அழகு மற்றும் சிறந்த என்று பொருள். 'உத்திரம்' என்பதற்கு ரகசியம் என்றும், 'கோசம்' என்பதற்கு சொல்லுதல் என்றும் பொருள்படும். 'மங்கை' என்பது அம்பாளைக் குறிக்கும

அம்பாளுக்கு 'ஓம்' என்றும் பிரணவ மந்திர விளக்கத்தை, இறைவன் விளக்கும் இடம் என்பதே இதற்கு சரியான பொருளாகும்.

ராவணனுக்கு மங்கள நாண் அணிவிக்கும் பாக்கியத்தை, இத்தலத்தில் இருந்தே அருள்பாலித்தமையால், இறைவன் 'மங்களநாதர்' ஆனார்.

இந்த ஆலயத்தில் மட்டும் சிவபெருமானுக்கு, தாழம்பூவைக் கொண்டு பூஜிக்கப்படுகிறது.

திருவிளையாடல் புராணத்தில் வரும் "வலை வீசி மீன் பிடித்த படலம்" இந்தத் தலத்தில் தான் நடந்தது என்று வரலாற்று ஆய்வாளும் தெரிவிக்கின்றனர்.

மண்டோதரி இவ்வூர் இறைவனை வழிபட்டு இராவணனைக் கணவனாகப் பெற்றதாக ஒரு கதை உண்டு

ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்

ஆதிசங்கரர், ராமானுஜர், சாய்பாபா, ரமண மகரிஷி போன்ற மகான்கள் அவதரித்த அற்புத பூமியும் இதுதான்.

இவ்வூர்க் கோயிலிலுள்ள சிவனைத் திருவாசகம் 38 இடங்களில் குறிப்பிடும்அளவுக்குப் பெருமை வாய்ந்த திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது தேவாரப் பாடல்கள் இதனைப் பாடவில்லை.

இக்கோயிலின் தலமரம் இலந்தை. இம்மரம் 3000 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது. ‘இலவந்திகைஎன்னும் சொல்லே மருவிஇலந்தைஎனக் கருதுகின்றனர். இதனால் சங்ககாலஇலவந்திகைப்பள்ளிஇக்கால உத்தரகோசமங்கை எனக் கருதுகின்றனர்.

இந்தத் தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர் வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.

இங்கே உள்ள பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார்

 

அதிசயம் 1: மரகத நடராஜர்

 

இங்குள்ள நடராஜர் சிலை, பச்சை மரகதத்தால் ஆனது, ஐந்தரை அடி உயரம் கொண்டதுஇது ஆண்டுதோறும் சந்தனக் காப்பில் இருக்கும்,

ஆருத்ரா தரிசனத்தன்று மட்டுமே சந்தனக் காப்பு நீக்கப்பட்டு அதன் பச்சை நிற திருமேனியைப் பார்க்கலாம்இது மிகவும் அரிதான, அதிசயமான சிலை. உலகில் வேறு எந்த தெய்வ சிலையும் .பச்சை மரககல்லினால் உருவாக்கப்பட்டதில்லை.  

அதிசயம் 2: கடல் மீன்கள் குளத்தில்

இத்தலத்து கோயில் குளத்தில் வாழும் மீன்கள் கடல்நீரில் வாழும் மீன்கள் என்பதும் வியப்பு சேர்க்கிறது

அதிசயம் : 3 வாயில் கல் பந்துடன் யாழி:

 உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தைக் கொண்டுள்ளன. கையை நுழைத்து, இந்தப் பந்தை நகர்த்த முடியும்.. உருட்ட முடியும் ஆனால் வெளியே எடுக்க முடியாது.

பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன்.

 

தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.

நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.

ஓம் நமசிவாய…

சுந்தர்ஜி

தமிழன் திமிரானவன்

 

 


 

No comments:

Post a Comment