Tuesday, December 9, 2025

தினம் ஒரு ஆலயம் - அதிசயம் 3. சோம்நாதர் கோயில் - குஜராத்

 

3.   சோம்நாதர் கோயில் - குஜராத்

 

இத்தலம் கிர்சோம்நாத் (ஜுனாகட்) மாவட்டத்தில் உள்ள பிரபாசபட்டினம் வெராவல் கடற்கரை அருகே அமைந்துள்ளது.

 

சிவனின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது.

 

சோமன் என்றால் சந்திரன்.

 

சந்திரன் இரண்யா நதி,  கபில நதி, சரஸ்வதி நதி மூன்றும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமிக்கும் பிரபாச தீர்த்தம் அருகில் சிவன் கொடுத்த ஜோதிர்லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டத்தால் இது சோமநாதர் என்று பெயர் பெற்றது.

 

இந்த இடத்தில் சந்திரனின் ஒளி மிகபிரகாசமாக வீசும்.

 

பலராமன் அவதாரம் முடிந்து பாம்பாக மாறி புற்றில் மறைந்த இடமும் இதுதான்.

 

கிருஷ்ணன் அவதார நிறைவில் வேடன் அம்பு பட்டு உயிர் நீத்த இடமும் இதுதான்.

 

ஆதிசங்கரர் ஸ்தாபித்த சாரதா பீடமும் இங்குதான் உள்ளது

 

இக்கோயில் ஏழு முறை முகலாயர்களால் கொள்ளை அடிக்கப்பட்டு தரமட்டமாக்கப்பட்டும் மிண்டும் மீண்டும் எழுப்பட்ட வரலாறு கொண்டது சோமநாதரர் கோயில் மட்டுமே.

 

ஆதி கோயிலில் மூலஸ்தானத்தில் சிவலிங்கம் எந்த பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கும்படியும் அதன் கீழே பிரகாசமாக ஒளி இயற்கையிலேயே ஏற்படும்படியும் அமைக்கபபட்டிருந்தது.

 

கோயில் முழுவதும் தங்கத்தால் கட்டப்பட்டிருந்தது.

 

கஜினியும் அவர் படைகளும் எவ்வளவோ முயன்றும் சிவலிங்கம் எப்படி அந்தரத்தில் தொங்குகிறது என்று அறிய முடியவில்லை.

 

கடைசியில் கோயிலில் மேற்கூறை பாறையை இடித்து அகற்றும்போதுதான் அந்தரத்தில் இருந்த சிவலிங்கம் அசைந்தது.

 

மேற்கூறை முழுவதும் இடித்து அகற்றிய பின்னரே சிவலிங்கம் தரையில் விழுந்தது,

 

முழுவதும் ஒருவித காந்த சக்தியை தரைக்கும் மேற்கூரைக்கும் இடையில் உருவாக்கி சிவலிங்கத்தை அந்தரத்தில் மிதக்கும்படி கட்டிடகலையில் அன்று வல்லுனராக இருந்தனர் நம் முன்னோர்கள். (ஆதாரம்: மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள்)

 

ஆனால் இன்று இதை அறியாத இங்கிருக்கும் பதர்கள் கிறுத்துவ வெள்ளைகாரன் வந்துதான் நமக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்தான் என்று எள்ளி நடையாடுவதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

 

இந்துக்கள் புனிதமாக முதன்மையாக கருதும் இடத்தில் சோமநாதர் ஆலயம் முக்கிய இடம் பெறும்.

 

நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.

 

ஓம் நமசிவாய…

 

சுந்தர்ஜி

தமிழன் திமிரானவன்


 

No comments:

Post a Comment