Thursday, December 11, 2025

தினம் ஒரு ஆலயம் - அதிசயம் 12. பட்டீஸ்வரர் திருக்கோயில் பேரூர் கோயமுத்தூர்

 

12.   பட்டீஸ்வரர் திருக்கோயில் பேரூர் கோயமுத்தூர்

இக்கோயில் கரிகால சோழனால் இரண்டாம் நூற்றாண்டில் (1900 ஆண்டுகளுக்கு முன்னர்) கட்டப்பட்டதுஇதனை வட நாட்டவர்கள் தட்சிண கைலாயம் என்று அழைக்கிறார்கள்.

இக்கோயில் அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் போன்றவர்களால் பாடப்பெற்றதாகும்.

இங்கு சிவபெருமான் பட்டீசுவரர் என்ற பெயருடன் பச்சை நாயகி அம்மன் துணையுடன் அருள்பாலிக்கிறார்.

இக்கோயில் தேவாரவைப்புத்தலமாகும் திருஞானசம்பந்தர்திருநாவுக்கரசர்சுந்தரர் ஆகியோரால் பாடப்பெற்ற பெருமையுடையது

சிவலிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் குளம்படி தழும்பை இப்போதும் காணலாம்.

 

முக்தி தலம் என்பதால் நாய் வாகனம் இல்லாத ஞான பைரவர் இங்கு அருள் செய்கிறார்.

 

இறைவன் திருவிளையாடல் புரிந்த தலம் என்பதால் நாற்று நடும் திருவிழா இங்கு விசேஷம்.

 

சிவாலயங்களில் ஆடும் நிலையில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும். ஆனால், ஆடி முடியப்போகும் நிலையில் நடராஜர் எப்படி இருப்பார் என்பதை இக்கோயிலில் காணலாம்.

 

பெருமாள் கோயில்களில்தான் சொர்க்கவாசல் எனப்படும் பரமபதம் கதவு திறக்கப் படும். ஆனால் கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.

 

பங்குனி உத்திரம், ஆருத்ரா, போன்ற தினங்களில் நடராஜர், சிவகாமி அம்மன் வீதியுலா சென்று திரும்பும் சமயம் சிவகாமி அம்மன் மட்டும் இந்த சொர்க்க வாசல் வழியே கோயிலுக்குள் நுழைவாள்.

 

அண்ணன் மகாவிஷ்ணுவிற்கு உரிய வாசலில் தங்கை அம்பிகை உரிமையாக நுழைவதாக சொல்லுகிறார்கள்.

 

சுந்தரமூர்த்தி நாயனாருக்காக ஸ்ரீநடராஜர் தமது தில்லை திருநடனத்தை காட்டியருளிய தலம் பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில். எனவே, இவ்வூர் நடராஜர் `குடக தில்லை அம்பலவாணன்என்று சிறப்பிக்கப்படுகிறார்.

 

சிவபெருமான் அடித்த அடியால், சப்பையான தாடையுடன் காட்சி தரும் நந்தி தேவர்.

 

கனக சபை: . இது 17ம் நூற்றாண்டில் அழகாத்ரி நாயக்கரால் கட்டப்பட்டது

இதில் உள்ள ஐந்து தூண்களும் தங்கக் கவசங்களால் மூடப்பட்டிருக்கும். இந்த தூண்களில் காணப்படும் நடனப் பெண் சிற்பங்கள், அந்தந்த காலத்தின் நடன அசைவுகளைப் பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது. கனக சபையில் மகா விஷ்ணு, பிரம்மா, காளி தேவி, சுந்தரர் ஆகியோருக்கு நடராஜன் தனது தாண்டவ நடன தரிசனத்தை காட்சி தரும் வகையில் அமைந்துள்ளார்.

 

 

ஐம்பெரும் அதிசயங்கள் 

1.        எலும்பு கல்லாகுதல்

 

இத்தலத்தை அடைந்தோர்க்கு, அழியா நிலைமையைத் தரும் என்பதின் சான்றே, இங்குள்ள காஞ்சிமா நதியில் (நொய்யல்) இடப்படுகின்ற மனித அஸ்தியின் எலும்புகள் கல்லாக மாற்றப்பட்டு, நிலைபெறுதல்தான் உண்மையான சான்று. இந்நதியில் நீரோட்டம் இருக்கும்போது, கோவையிலுள்ளோரும், கேரளாவினைச் சார்ந்தோரும், இறந்தவர்களின் அஸ்தி எலும்புகளை இந்நதியில் இட்டுச் சடங்கு செய்து வந்தனர். ஆக தன்னை அடைந்தோர்க்கு அழியா நிலையைத் தருவது இதுவே!

 

2.        இறவாப் பனை

 

இத்தலத்தின் இறவாப் பனையின் வயது எவ்வளவோ ஆண்டுகள். இறப்பே இல்லாது வாழ்வது இப்பனை. பிறப்பும், இறப்பும் உபாதிகள் எல்லாம் இத்தலத்தை அடைந்தோர்க்கு நீக்கம் பெறுவர் என்பதற்குச் சான்றுதான் இந்த இறவாப் பனை. ஆக பிறப்பும் இறப்பும் இல்லாதவர் இறைவனின் அருள் இதனை உணர்த்துவதாகும். (இந்த பனை இறவாத் தன்மை கொண்டது).

பிறவாப் புளி

இந்த பிறவாப் புளியின் விருட்சத்தை, நம் நல்வினைப் பயனின் காரணத்தினாலே, நாம் இந்த கலியில் இதைக் காணும் பேற்றைப் பெற்றோம். இந்த இறவாப் புளியின் விருட்சமானது, பட்டீசரின் திருக்கோயிலுக்கு எதிரிலேயே இருக்கிறது. இந்தப் புளியமரக் கனியின் விதைகள் முளைப்பதில்லை. நீங்கள் இவ்விதையினை எடுத்துச் சென்று எங்கே ஊன்றினாலும் அது முளைப்பதில்லை. அப்படியே முளைக்க ஊன்றிய விதைகள், முளை வந்ததும் தீய்ந்து போகும். இது அன்றைய நாளிலிருந்து இன்றைக்கும் இது கண்கூடாக காணலாம் ஆக இத்தலம் என்றும் அழியா நிலைபெற்றவை என்பதை நமக்கு காட்டுவதாகும்.

 

3.        புழுக்கா சாணம்

 

இத்தலத்தில் விழும் கோ-வின் சாணங்கள், எவ்வளவு நாளானாலும் அதில் புழு உருவாவதில்லை. (மற்ற எல்லா இடத்திலும் கோ-வின் சாணங்களில் மறுநாளிலே புழுக்கள் பிறந்து நெளியும்.) ஆக, இத்தலத்தை அடைந்தோர்க்கு மேலும் பிறப்பில்லை என்பதான சான்று இது.

 

4.        உயிர் பிரியயில் வலது செவி மேலாக இருத்தல்

 

இந்தத் தலத்தில் இறப்பவர் யாவரும், இறக்கும் சமயம் அவர்களின் வலது செவி மேலாக இருந்தவாறே இறக்கின்றனர். இன்றைக்கும் இது கண்கூடு. இத்தலத்திலே இறப்பு உயிர்கள் எவையாயினும், அவையெல்லாம் அதற்கு முன் எவ்வாறு கிடப்பில் கிடந்து உழன்றாலும், உயிர் பிரியும் சமயம், இத்தல இறைவன், அவர்களின் வலது செவியில் திருவைந்தெழுத்தை உபதேசம் செய்து, தன்னடியிற் சேர்த்துக்கொள்கிறான் ஆக, காசியைப்போல பிறவாப் பெருமையை, இத்தலத்தில் இறப்போர்க்கு இத்தல இறைவன் கொடுத்து வருகிறான்.

 

5.        செம்பு (உலோகம்) பொன்னாகுதல்

 

இந்த பேரூர் தலத்திலே, வடகைலாயம் எனுமிடத்தில் உள்ள திருக்கோயிலிலே, பிரம தீர்த்தம் என்றும், குண்டிகை தீர்த்தம் என்றும் கூறப்படும் கிணறு ஒன்று இருக்கிறது. (இந்த வடகைலாயக் கோயிலின் நந்தவனத்திற்கு அருகில் ஒற்றையாக நிற்கும் பனைமரமே இறவாப் பனை ஆகும்.) இந்த கிணற்றுத் தீர்த்தத்தில் குளித்து வந்தோர், பைத்தியம் மற்றும் பெருநோய்கள் பீடித்தோர், நோய் ஒழியப் பெற்றிருக்கிறார்கள்.

அப்படி இங்கு வந்து குளித்தோர், இக்கிணற்றிலே செப்புக் காசு ஒன்றை இட்டு விடுவர். அதன் பின் இக்கிணற்று நீரை குளிப்பார்கள். (அந்நாளில் செப்புக் காசுகள் வழக்கத்தில் இருந்தது.) இதில் இடப்படும் செப்புக் காசுகள் சிலகாலம் சென்று, செப்புக் காசிலிருக்கும் களிம்புகள் நீங்கித் தங்கமாக ஒளிர்ந்தன.

அந்தத் தங்கத்தைப் பார்த்துவிட்டு, “ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளிவீசும் பொன்என்று தாயுமானாரே கூறியிருக்கிறார். ஒளிவிடும் பொன் என்பதை, இக்காலத்தில் (radium) என்போம்.

1918-ம் வருடத்தில், இந்தக் கிணற்றை சேறு வாரி சுத்தம் செய்தபோது, அந்தச் சேற்றுத் தூர்வையிலே, இந்தக் கிணற்றில் போடப்பட்ட செப்புக் காசுகள், பொன்னாய் மாறி ஒளிர்ந்தன. ஆக, செம்பினில் களிம்பு நீக்கி பொன்னாக்கி இருக்கிறது இந்த தீர்த்தம்.

இத்தலத்தினைச் சுற்றிச் சூழப்பட்டிருக்கும், எவ்வித நீர் நிலைகளிலும் இவ்விதத் தன்மை இருக்கப் பெறவில்லை என்பது உறுதி.

முன் சமயத்தில், கிணற்றுத் தீர்த்தத்தில் காணப்படும், பெளதீகப் பொருள்களை ஆராய்ச்சி செய்திருக்கின்றனர். அதனை ஆய்வு செய்தோர், இது மனித உணர்விற்கு மேற்பட்டவை என கூறினர்.

அதிசயம் 6: சிங்கத்தின் வாயில் உருளும் கல்

ஆலயத்தின் முன்பு சிங்கமொன்று சிலை வடிவில் காட்சித் தருகின்றது. அதன் வாயினுள் உருண்டைக் கல்லொன்று உருளுகின்றது. கல் வெளியில் வராதவாறு சிங்கத்தின் பற்கள் நிற்கின்றன. அற்புதமாக கலை நுட்பத்துடன் காண்போர் வியக்கும் வண்ணம் சிங்கத்தின் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

அதிசயம் 7: ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சுழல் தாமரை, நான்கு புறமும் தொங்கும் கல் சங்கிலிகள்.

இரும்பை வளைத்து சங்கிலி செய்து பார்த்திருப்போம். ஆனால் இங்கு கல்லை வளைத்து சங்கிலி செய்தே விட்டான் தமிழன் நான்குபுறமும் தொங்கும் கல்லால் ஆன சங்கிலிகள்.பார்வையாளரை பிரமிப்பில் ஆழ்த்தும்.


பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன்.

 

தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.

நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.

ஓம் நமசிவாய…

சுந்தர்ஜி

தமிழன் திமிரானவன்


 

No comments:

Post a Comment