Wednesday, December 17, 2025

தினம் ஒரு ஆலயம் - அதிசயம் 17. சங்கரநாராயணன் திருக்கோயில் சங்கரன் கோயில்

தினம் ஒரு ஆலயம் - அதிசயம்

17. சங்கரநாராயணன் திருக்கோயில் சங்கரன் கோயில்

தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில்

இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன்

உக்கிரப் பாண்டிய மன்னனால் சுமார் கி.பி. 1022-ல் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது,

திருக்கோயில் கர்ப்பக்கிரஹத்தில் சங்கரலிங்கப் பெருமான் சிறிய உருவமாயெழுந்தருளியிருக்கிறார்

அம்மன் (கோமதி அம்மன்) தவம் செய்து இறைவனை அடைந்த 'ஆடித் தபசு' விழாவுக்குப் பிரசித்தி பெற்றது,

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில், உத்திராட நட்சத்திரத்தன்று சிவபெருமான் சங்கரநாராயணராகக் அன்று சிவன் பாதி, திருமால் பாதி உருவமாக காட்சி தரும் திருவிழா (ஆடித் தபசு) இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இச்சன்னதியில் ஸ்படிகலிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது.

சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தரும் இவருக்கு அபிஷேகம் கிடையாது.

இந்த கோயில் ஐம்பூதத் தலங்களில் முதன்மையான மண் தலமாக விளங்குகிறது.

இந்த கோவில் காமிகாமம் என்னும் ஆகமம் விதிப்படி கட்டப்பட்டுள்ளது.

அதிசயம் :

சிவலிங்கத்தின் மீது படும் சூரிய ஒளி

சங்கரலிங்கப்பெருமாள் கோயிலின் மற்றொரு சிறப்பு. ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் 21, 22, 23 தேதிகளில் சூரிய ஒளி மானுடர்கள் சென்று தரிசனம் செய்யும் வாசல்கள் வழியாகவே நீள வாக்கில் சென்று,

சிவலிங்கத்தின் வலப்புறமாக விழத்துவங்கி சிறிது சிறிதாக நகர்ந்து சிவலிங்கத் திருமேனி முழுவதும் வியாபிக்கும்.

சிலசமயம் நான்கு நாட்கள் கூட விழும்

வருடத்தில் வரும் பிரத்யேகமான இந்த ஆறு நாட்கள் மட்டும் சூரிய கதிர்கள் நேரடியாக சிவலிங்கத்தின் மீது விழும் அளவிற்கு தொழில்நுட்பத்தோடு கோயில் கட்டப்பட்டுள்ளது அதிசயம்தானே?

1000 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கல்லுக்கு உயிர் கொடுத்த

கல்லிலே கலைவண்ணம் கண்ட பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கும் .

தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.

நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.

ஓம் நமசிவாய…

சுந்தர்ஜி
தமிழன் திமிரானவன்

 

No comments:

Post a Comment