Tuesday, December 9, 2025

தினம் ஒரு ஆலயம் – அதிசயம் 1. கைலாய மலை – மானசரோவர் ஏரி – அமர்நாத் பனிலிங்கம்

 

தினம் ஒரு ஆலயம் – அதிசயம்

உலகின் முதல் மனிதன் தமிழன். உலகின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம். உலகின் முதல் அணை கல்லணை. உலகின் முதல் கப்பல் படை இராஜேந்திர சோழன் வைத்திருந்தான். உலகின் மிகப்பெரிய வழிபாட்டுதளம் அங்கோர்வாட் கோயில் சோழன் கட்டியது. உலகின் முதல் வான சாஸ்திரம் பஞ்சாங்கம் தமிழன் கண்டுபிடித்தது. உலகின் முதல் மருத்துவம் சித்த மருத்துவம் தமிழன் கண்டுபிடித்தது. உலகின் முதல் வாழ்வியல் முறை நூல் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள். தமிழன் எழுதியது. இதுபோல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வரை அனைத்தையும் கண்டுபிடித்து உலகிற்கு கொடையாக கொடுத்த தமிழன் திமிரானவன்.

 

உலகின் தென் பகுதியில் அதாவது தெற்கு ஆசியாவின் கீழே இமயமலையில் இருந்து குமரிகண்டம் வரைக்கும் உள்ள பகுதி முழுவதும் எங்கும் உலகின் ஒரே கடவுள் சிவனுக்கு (கடவுள் வேறு அவதாரம் வேறு. கடவுள் பிறப்பு இறப்பு அற்றவர். சிவன் யாரையும் வணங்காதவர். அவதாரம் இராமர், கிருஷ்ணர், முருகன் விநாயகர் மற்ற எல்லோரும் – ஆதாரம்: லிங்க புராணம்) கோயில் அமைத்து ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு அதிசயத்தை ஒளித்து வைத்த தமிழன் கட்டிடகலையின் பீஷ்ம பிதாமகன்.

 

அதனால்தான் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி என்று மாணிக்க வாசகர் திருவாசகத்தில் சொல்கிறார்.

 

அந்த அதிசயத்தை கட்டிடகலை சிறப்பை ஒவ்வொன்றாக இந்த பக்கத்தில் ஒவ்வொரு நாளும் பார்ப்போம்.

 

(இது நான் 10 ஆண்டுகளாக நான் எழுத நினைத்து காத்திருந்த கட்டுரைகள். இப்போதுதான் சூழ்நிலையும் மனமும் உடலும் ஒத்திசைத்து எழுதவைக்கிறான் சிவன்.)

 

1.   கைலாய மலை – மானசரோவர் ஏரி – அமர்நாத் பனிலிங்கம்

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி                                                    ஊற்றாகி உள்ளே ஒளிந்தாய் போற்றி!

ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி                                                          ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி!

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி                                                            கயிலை மலையானே போற்றி போற்றி!

உலகின் உயர்ந்த இமய மலையில் இருக்கும் கைலாய மலை சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் வசிப்பிடமாக நம்பப்படுகிறது. அவர்கள் தியானம் செய்யும் இடம் இது.

கைலாய மலையை தரிசனம் செய்வதன் மூலம் 21 தலைமுறைகள் முக்தி அடையும் என்பது ஒரு நம்பிக்கையாகும்..

 

இதுவரை கைலாய மலை மேல் யாருக்கும் ஏற அனுமதி இல்லை. அனுமதி கிடைத்தும் யாரும் இதுவரை ஏறியதில்லை.

 

காரணம் மலையையே சிவனாக பார்ப்பதால்தான். அருகில் உள்ள மானசரோவர் ஏரிக்குச் சென்று, கைலாய மலையை சுற்றி வருவது மட்டுமே வழக்கமாகும்.

 

வசிஷ்டர், மரீசி போன்ற முனிவர்கள் சிவபெருமானின் வழிபாட்டிற்காக ஒரு நீர்நிலையை வேண்டினர். அதற்கு, பிரம்மா தனது மனதிலிருந்து இந்த ஏரியை உருவாக்கினார். அதனால்தான் இதற்கு 'மானசரோவர்' எனப் பெயரிடப்பட்டது.

 

இந்துப் புராணங்களின்படி, மானசரோவர் ஏரி 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது,

 

மானசரோவர், கைலாஷ் மலைக்கு அருகில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான நன்னீர் ஏரியாகும்..

 

அமர்நாத் பனிலிங்கம் என்பது ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனியால் ஆன சிவலிங்கமாகும்.

 

இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனித தலமாகும்

 

இந்தக் குகையில், நீர்ப்பனிக்கட்டியால் ஆன ஒரு லிங்கம் இயற்கையாக உருவாகிறது.

 

இது ஒவ்வொரு ஆண்டும் மே – ஆகஸ்ட் மாத காலங்களில்  மட்டுமே உருவாகும்.

 

 இங்குள்ள குகை மற்றும் சிவலிங்கம் இரண்டும் இயற்கையாகவே உருவாகின்றன.

 

அமர்நாத் குகைக்குள், பனித்துளிகள் உறைந்து ஒரு சிவலிங்கமாக உருவாகிறது. லிடர் பள்ளத்தாக்கில் உள்ள பனிப்பாறைகள் உருகி, நீராக குகைக்குள் வருவதால் இந்த பனிலிங்கம் இயற்கையாக உருவாகிறது..

 

தேவாரம், திருவருட்பா முதல் அனேக தமிழ் இலக்கிய பாடல்களில் கைலாயமலை, சிவன் பற்றிய குறிப்புகள் உண்டு.

 

நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.

 

ஓம் நமசிவாய…

சுந்தர்ஜி

தமிழன் திமிரானவன்



 

No comments:

Post a Comment