2.
காசி
விஸ்வநாதர் ஆலயம் – வாரணாசி
காசி விஸ்வநாதர்
புராண காலத்துக்கு முன்னரே இருந்தது என்பதற்கு பல புராண இதிகாசங்களில் இக்கோயில் பற்றிய
தகவல்கள் அனேக இடங்களில் இருக்கிறது.
புரணாங்கள்படி
ஸ்தல வரலாற்றுப்படி பெருமாள் சக்தியும் சிவனும் சேர்ந்த இந்த ஜோதிர்லிங்கத்தை பிரதிஷ்டை
செய்து பூஜித்துவந்தார்.
பிரம்மன் சனி எமன்
இங்கு தவம் செய்து வரம் பெற்றதும் உண்டு.
சப்த ரிஷிங்கள்
இங்கு தவம் செய்து விஸ்வேஸ்வரனை பூஜித்து நட்சத்திர அந்தஸ்து பெற்றது உண்டு. அதைத்தொடர்ந்தே
இன்று வரை இக்கோயிலில் சப்தரிஷி பூஜை தினமும் நடைமுறையில் இருப்பதை காணலாம்.
கிடைத்த தகவலின்படி
சற்றேற குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்னர் மாமன்னன் விக்கிரமாதித்யன் விஸ்வேஷ்வரா கோயில்
என்ற பெயரில் காசியில் பெருமாள் பிரிதிஷ்டை செய்த இந்த மரகதலிங்கமான ஜோதிர்லிங்கத்திற்கு
கோயில் கட்டினார்.
இதை முதலில் கொள்ளை
அடிக்க வந்த முகலாயர் குத்புதீன் ஐபெக் 1194 இடித்து தரைமட்டமாக்கி செல்வங்களை கொள்ளை
அடித்து சென்றார்.
குஜராத் வியாபாரிகள்
சேர்ந்து மீண்டும் எழுப்பிய கோயிலை 1230ல் முகமது கோரி கோயில் சொத்துக்களை கொள்ளை அடித்து
விட்டு இடித்து தள்ளிவிட்டார்.
மீண்டும் சிவபக்தர்களால்
கட்டப்பட்டகாசி விஸ்வநாதர் கோயிலை1435ல் ஜான்பூர் சுல்தான் ஷர்க்குவி கொள்ளை அடித்து
இடித்து தள்ளினார்.
மீண்டும் எழுப்பபட்ட
கோயிலை 1447ல் சிக்கந்தர் லோடி கொள்ளைஅடித்துவிட்டு முழுவதும் இடித்து தள்ளினார்.
மீண்டும் காசி
விஸ்வநாதர் கோயில்1550-1585ம் ஆண்டுகளில் ரகுநாத
பண்டிட் மற்றும் ராஜா தோடர்மால் அவர்களால் நிர்மானிக்கப்பட்டது.
கடைசியாக 1669ல்
ஒளரங்கசீப் கோயிலை கொள்ளை அடித்துவிட்டு அதன்மீது ஞானவாபி மசூதி எழுப்பிவிட்டார். அருகில்
இருந்த ஞானவாபி தீர்த்தையும் மசூதி வளாகமாக்கி மறைத்துவிட்டார்.
மிண்டும்1780ல்
இந்தூர் மகாராணி பேரரசி அகல்யாய் ஹோல்கர் ஞானவாபி மசூதியை ஒட்டி முன்பு இருந்த காசிவிஸ்வநாதர்
ஆலயத்தின் எஞ்சிய பகுதியுடன் இணைத்து புதிதாக இப்போது இருக்கும் ஆலயத்தை நிர்மானித்தார்.
இந்த திருத்தலத்தின்
அருகில் ஓடும் கங்கை நதியின் மணிகர்னிகா படித்துறையில் குளித்து முடித்து காசி விஸ்வநாதரை
தரிசித்தால் சகல பாவங்களும் தீர்ந்து மோட்சம் கிட்டும் என்று இந்துக்களால் நம்பப்படுகிறது.
இந்த ஊரின் சிறப்பே
இந்த தலத்தின் சிறப்பை சொல்லும்..
இந்த காசியில்
ஐந்து அதிசயம் இன்று இருக்கிறது. இங்கு பல்லி சப்தம் இடாது, பசு யாரையும் முட்டாது.
இங்கு விளையும் பூக்கள் மணக்கது. காக்கைகள் கிடையாது பருந்துகள் வட்டமிடாது. இங்கு
எரிக்கப்படும் பிணங்கள் நாற்றம் அடிக்காது.
கங்கையில் பிணங்கள்
எரித்தாலும் எவ்வளவு அசுத்தங்கள் செய்தாலும் அந்த நீர் தன்னைத்தானே சுத்திகரித்துக்கொள்வதால்
எப்போதும் நன்னீராகவே இருக்கும் புழு பூச்சிகள் வராது. அதனாலேயே அது புனித நதி அஸ்தஸ்து
பெறுகிறது.
இதனாலயே இந்துக்கள்
காசிக்கு வந்தாலே அறிந்தும் அறியாமல் செய்த பாவங்கள் தீரும் மோட்சம் கிடையும் என்று
தங்கள் இறுதிக்காலத்தில் காசிக்கு வந்து செல்வதையோ காசியில் இறப்பதையோ விரும்புகிறார்கள்.
காசியில் இருந்தே
இராமர் சிவலிங்கத்தை எடுத்து சென்று இராமேஸ்வரத்தில் வைத்து பூஜை செய்ததால்… காசி யாத்திரை
செல்பவர்கள் இராமேஸ்வரம் வந்து வழிப்பட்டே
யாத்திரையை பூர்த்தி செய்கிறார்கள்.
நாளை வேறொரு கோயில்
அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.
ஓம் நமசிவாய…
சுந்தர்ஜி
தமிழன் திமிரானவன்
No comments:
Post a Comment