Tuesday, December 9, 2025

தினம் ஒரு ஆலயம் அதிசயம் 7. தஞ்சை பெரிய கோயில் – தஞ்சாவூர்


 

7.   தஞ்சை பெரிய  கோயில் – தஞ்சாவூர்

தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதன் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில்.[

10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார்.  1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி  1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.

கல்வெட்டுக்களில் இறைவனின் பெயர் ஆடல்வல்லான், தக்ஷ¢ணமேருவிடங்கர் எனவும், பின்னர் இராசராசேச்சர முடையார், இராசராசேச்சமுடைய பரமசுவாமி எனவும்; ஊர்ப் பெயர் பாண்டிகுலாசனி வளநாட்டி தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. (பாண்டி குலாசனி என்பது இராசராசனின் விருதுப்பெயர். இதற்குப் பாண்டியர் குலத்துக்கு இடியைப் போன்றவன் என்று பொருள்)

1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது

 திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும்.

இக்கோவில் அடி முதல் முடி வரை கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. ஆகவே, இக்கோவில் கற்றளி என்ற பெயரையும் பெறும்

ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகவும்

அதிசயம் 1.

 தேர்ந்தெடுக்கப்பட்ட கற்கள் அடுக்கியும் கோர்த்தும் வைத்து கட்டப்பட்டுள்ளது. கோள்களின் கதிர்வீச்சுக்கள் அதன் மையப் பகுதியில் குவியுமாறு வடிவமைக்கப்படுள்ளது. புவி அதிர்வுகளினால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

கதிர்வீச்சுக்களின் குவியலில், சோழ கோவில்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஆவுடை-லிங்கங்கள் தொடர்ந்து சக்தியுள்ள மையமாக புகழுடைய கோவில்களாக சிறந்து விளங்குகின்றன.

அதிசயம் 2

இக்கோவிலில் தமிழின் சிறப்புக்களும் மாமன்னர் இராசராச சோழனின் தமிழ் பற்றும்

 கோயிலில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் 12 அடி தமிழின் உயிர் எழுத்துக்கள் 12, சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி தமிழின் மெய் எழுத்துக்கள் 18, கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216, சிவ லிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி தமிழின் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 ஆகும்.

அதிசயம் 3

கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.

 

அதிசயம் 4 அஸ்திவாரம்:

மொத்தம் ஒன்றரை லட்சம் டன்கள் எடை கொண்ட கருங்கற்களை உடைய கோயிலைத் தாங்கி நிற்பதற்கு ஆழமான அடித்தளம் (அஸ்திவாரம்) அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இக்கோயிலின் ஆயிரக்கணக்கான அதிசயங்களில் ஒன்றாக கோயிலுக்கான அடித்தளம் வெறும் 5 அடி ஆழம் மட்டுமே போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கோயிலின் அஸ்திவாரம் மரபுவழி கட்டுமானமான ஆற்று மணல் படுகையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

கோயில் அமைந்துள்ள இடம் சுக்கான் பாறை பகுதி. கோயிலின் கட்டுமான அளவுக்குப் அந்தப் பாறையை ஆழமாகத் தோண்டி தொட்டியாக வெட்டி அதில் பரு மணலை நிறைத்து அதன் மீது கோயிலைக் கட்டியிருக்கிறார்கள்.

கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும். அதேசமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது. பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது.

அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது. இது தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது. அதனால்தான் தலையாட்டி பொம்மைகள் தஞ்சாவூரில் செய்தார்களோ!!

அதிசயம் 5 கட்டுமானம்

இன்று இருக்கும் அதிநவீன தொழில் நுட்பங்கள் கணினி இயந்திர கருவிகள் வைத்து இதை போல மீண்டும் எழுப்புவதாக இருந்தால் 300 ஆண்டுகள் ஆகும் என்று வல்லுனர்கள் கணிக்கின்றனர்.

ஆனால் பெரியகோயில் கட்டுமானம் எந்தவித தொழில்நுட்பமும் வராத 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் வெறும் மண்வெட்டி, கடபாறை சுத்தி உளி கொண்டே வெறும் 7 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டது அதிசயம்தானே?

 

நீங்களே நேரில் வந்து பார்த்து பிரமித்துக்கொள்ளுங்கள்.

தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.

நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.

ஓம் நமசிவாய…

சுந்தர்ஜி

தமிழன் திமிரானவன்


 

No comments:

Post a Comment