Tuesday, December 9, 2025
தினம் ஒரு ஆலயம் - அதிசயம். 11. நெல்லையப்பர் திருக்கோயில் திருநெல்வேலி
தினம் ஒரு ஆலயம் - அதிசயம் 10. தியாகராஜர் திருக்கோயில் திருவாரூர்
10.
தியாகராஜர் திருக்கோயில் திருவாரூர்
திருவாரூர் தியாகராஜர் கோயில் திருவாரூரில் அமைந்துள்ள மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதுமான கோயில் ஆகும்
சோழ மன்னர் முசுகுந்தன் இந்திரனிடமிருந்து சோமாஸ்கந்தரான
தியாராசரைப் பெற்றுவந்து திருவாரூரில் கோயில்கொள்ளச் செய்தார் என்று திருவாரூர் நான்மணிமாலை என்னும் நூல் குறிப்பிடுகிறது.
முசுகுந்த சோழன் சிறந்த சிவபக்தன். இவன் இந்திரன் பூசித்து வந்த சிவலிங்கம் உட்பட ஏழு லிங்கங்களை இந்திரன் பால் பெற்று மீண்டான்; அவற்றைத் திருவாரூர், திருநாகைக் காரோணம், திருக்காறாயில், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருநள்ளாறு, திருவாய்மூர் ஆகிய ஏழு திருப்பதிகளிலும் எழுந்தருளச் செய்தான். ஆதலின் இந்த ஏழு பதிகளும் ‘சப்த விடங்கத் தலம்’ எனப்படுகின்றன.
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதாக வழங்கப்படுகிறது.
எனவே, அப்பர் சிவபெருமானைப் புற்றிடங்கொண்டார் என்ற பெயரால் அழைக்கிறார்.
இக்கோவில் நாயன்மார்களால் பாடற்பெற்ற
தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது.
சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற இத்திருத்தலம், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது.
இக்கோவிலில்தான், மனு நீதி சோழன் பசுவிற்கு நீதி வழங்கினார்.
அப்பர் திருவாரூரில் கோவில் கொண்டது எந்நாளில் எனப் பாடிய 10 பாடல்களில் திருவாரூர் தில்லைக்கு முற்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம். திருவாரூர் கோவில் அளவும், தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும்.
நமிநந்தியடிகள் நாயனார் தண்ணீரால் திருவிளக்கேற்றி வைத்து வழிபட்ட திருக்கோயிலாகும்.
இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 12 உயர மதில்கள், 13 மண்டபங்கள், 15 தீர்த்தக் கிணறுகள், 3 தோட்டம், 3 பிரகாரம் என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும். 24 உட்கோவில்களையும், 365 சிவலிங்கங்களையும், 86 விநாயகர் சிலைகளையும் கொண்டது திருத்தலம்.
நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம்.
அதிசயம் 1: இரண்டு சிவன் சன்னதி
இக்கோயிலில் சிவனுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர் என்றும் சிவன் அழைக்கப்படுகிறார்.
இவற்றில் வான்மீகி நாதர் சந்நிதி அதன் தொன்மையை அறுதியிட்டு கூறமுடியாத அளவிற்கு மிகப் பழமையானது.
அதிசயம் 2: ஒரே
சிவன் கோயிலில் 365 சிவலிங்கம்:
இங்கு 365 லிங்கங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதிசயம்
3: நின்ற நிலையில் நந்தி சிலை:
திருவாரூர்
தியாகராஜா கோயிலில் உள்ள நந்தி, மற்ற
சிவாலயங்களைப் போல அமர்ந்த நிலையில்
இல்லாமல், நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறது.
சுந்தரர் வேண்டியதன் பேரில், சிவபெருமான் நந்தியை அனுப்பியபோது, நந்தி சிவபெருமானின் உத்தரவுக்காகக் காத்து நின்றதாகக் கூறப்படுகிறது.
அதிசயம் 4: உலகின் பெரிய தேர்
உலகிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும்
அதிசய, 5: 1000 கல்தூண்
கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
பெயர் தெரியாத
தமிழர் சிற்பியின் அபார கைத்திறன்.
தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி
நுட்பத்தையும் திறமையையும்.
நாளை
வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.
ஓம்
நமசிவாய…
சுந்தர்ஜி
தமிழன்
திமிரானவன்
