கடவுள் ஒருவரே என்றால் ஏன் பல பெயர்கள்?
ஏன் பல வழிபாட்டு முறைகள் ?
சாதாரண மனிதர்களான நமக்கே தாத்தா, அப்பா, மகன், பேரன், பெரியப்பா, சித்தப்பா, மாமா, மச்சான், கொழுந்தன், என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டு அதற்கேற்ப மரியதையும், உபசரிப்பும் கிடைக்கிறது.
சர்வ வல்லமை படைத்த கடவுளை ஒவ்வொருவரும் தனக்கேற்றபடி விருப்பபடி அழைத்து, ஆசைப்படி வழிபாடு நடத்துவதில் தவறில்லை.
தண்ணீரை என்ன பெயரிட்டு அழைத்தாலும் (வாட்டர், பானி, நீலு, வெள்ளம் ) தாகத்தை தணிக்க பயன்படும்.
ஒரு வெள்ளை துணி தலையில் கட்டினால் முண்டாசு, தோளில் போட்டால் துண்டு. இடுப்பில் கட்டினால் வேட்டி. கால்களுக்கு இடையில் வைத்தால் கோவணம்.
இடத்திற்கு தகுந்த மாதிரி ஒரு வெள்ளை துணியையே அழைக்கிறோம். கடவுளும் அதுபோல்தான்.
பெயரும் வழிபாட்டு முறைகளும் வேறு வேறாக இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான்.
எல்லாமே நம் ஆரோக்கியத்துக்குதானே தவிர மூட நம்பிக்கைக்கு இல்லை.(இடைச்செருகல் நீங்கலாக)
நம் எண்ணங்கள் கலாச்சார பண்பாட்டு குழு..
No comments:
Post a Comment