Wednesday, December 24, 2014

Dwaraka Founded in Gujarat குஜராத்தில் துவாரகை கண்டுபிடிப்பு

கிருஷ்ணர் ஆட்சிபுரிந்த துவாரகையும் 5200 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கியது. தொல்லியல் ஆராய்ச்சியில், புதைந்த பகுதிகளைக் காண முடிந்ததால் துவாரகை இருந்தது உண்மை ன்பது நிரூபணம் ஆகியுள்ளது.

தொல்லியல் ஆராய்ச்சி: இந்திய தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகம், துவாரகை கடல்பகுதியில், 1983 முதல் 1990 வரை 18 ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. குஜராத் மாநிலம் லோத்தல் பகுதியில் தொல்லியில் ஆய்வாளர் எஸ்.ஆர். ராவ் தலைமையில் ஆய்வு நடந்தது. பழமையான நகரமான துவாரகை கடலுக்குள் இருப்பதை கண்டுபிடித்தனர். ஆய்வின்போது துவாரகையின் ஒருபகுதியான பேட் துவாரகையில் கி.மு.1528ம் ஆண்டைச் சேர்ந்தமண்பாண்டத்தையும், கடற்கரையில் 560மீட்டர் நீளமுள்ள சுவர் ஒன்றையும் கண்டனர். இப்பகுதி கிருஷ்ணர் ஆண்ட துவாரகை என முடிவு செய்தனர். இந்த முடிவுகளை எஸ்.ஆர்.ராவ், தி லாஸ்ட் சிட்டி ஆப் துவாரகா என்னும் நூலாக ஆங்கிலத்தில் வெளியிட்டார். இந்த ஆய்வு மூலம் மகாபாரதம் உண்மையில் நடந்த நிகழ்ச்சி என்பது உறுதியானது. மகாபாரத முடிவில் வந்த கலியுகம் தொடங்கி, 5113 ஆண்டுகள் ஆகிறது. அதற்கு 87 ஆண்டுகளுக்கு முன்பே துவாரகை மூழ்கியதால், இந்நகரம் மூழ்கி 5200 ஆண்டுகளாகிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

பேட் துவாரகை: கோமதி நதிக்கரையில் அமைந்த துவாரகாவுக்கு துவாரமதி, துவாரவதி, குசஸ்தலை என்ற பெயர்களும் உண்டு. துவாரகை அருகிலுள்ள பேட் துவாரகையிலும் கிருஷ்ணர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இங்கு 18 மீட்டர் அகலம் கொண்ட இரண்டு பிரதான சாலைகள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய குடியிருப்புகள், மூன்று பிரம்மாண்ட கட்டடத் தொகுப்புகள் தென்படுகின்றன. சுவரைக் கட்ட பயன்படுத்திய கற்கள், 3600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை வாய்ந்ததாக உள்ளது. பேட் துவாரகை ஒரு தீவுப்பகுதியாகும். இங்கு தான் கிருஷ்ணர், சத்தியபாமா, ஜாம்பவதி ஆகியோர் பொழுதுபோக்க வந்துள்ளனர். ஆங்காங்கே பூந்தோட்டம், ஏரிகளும் உள்ளன. 

மூழ்கிய துவாரகை: கடலில் மூழ்கிய துவாரகையில், அடிப்படை வசதியுள்ள குடியிருப்பு, வியாபார இடங்கள், அகன்ற சாலை, அழகான துறைமுகம் இருந்துள்ளன. தங்கம்,வெள்ளி, நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட கட்டடங்களும் இங்கு பிரசித்தமாக விளங்கியுள்ளன. குரு÷க்ஷத்ர யுத்தம் முடிந்து 36 ஆண்டுகளுக்குப்பின், துவாரகை முழுவதும் கடலுக்கடியில் மூழ்கியது. இதனை முன்கூட்டியே அறிந்த கிருஷ்ணர் யாதவர்களை பிரபாஸ் என்ற உயரமான மலைப்பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாத்தார். தற்போது இப்பகுதி சோம்நாத் எனப்படுகிறது. அழிந்த துவாரகையை நீர்மூழ்கிக்கப்பலில் சென்று பக்தர்கள் பார்ப்பதற்கு இந்தியக்கடல் அகழ்வாராய்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்து வருகிறது. தேவலோக தச்சன் விஸ்வகர்மா இந்நகரத்தைக் கட்டியதாக புராணங்கள் சொல்கின்றன.

துவாரகாநாத்ஜி மந்திர்: துவாரகை அழிந்த பிறகு, அங்கு மூன்று முறை கோயில் கட்டப்பட்டிருக்கிறது. எல்லாமே கடலில் மூழ்கியிருக்கலாம் அல்லது பிற சமயத்தாரால் அழிக்கப்பட்டிருக்கலாம். தற்போது உள்ள கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இது துவாரகாநாத்ஜி மந்திர் எனப்படுகிறது. மூலவர் கல்யாண நாராயணர் என்ற திருநாமத்துடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் திருநாமம் கல்யாண நாச்சியார். கண்ணனின் எட்டு துணைவியர் (அஷ்ட மகிஷிகள்), அண்ணன் பலராமன், துர்வாச மகரிஷி ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. இங்கு மன்னராக கண்ணன் வீற்றிருப்பதாக ஐதீகம்.

17
முறை போக்: துவாரகை கிருஷ்ணருக்கு தினமும் 17முறை உணவு படைக்கப்படுகிறது. இதை போக் என்பர். உடையும் தொடர்ந்து மாற்றப்படுகிறது. காலையில் சுவாமியை எழுப்பும் நிகழ்ச்சி உடாபன் எனப்படும். கிருஷ்ணனை பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் பாடியுள்ளனர்.

இருப்பிடம்: குஜராத் தலைநகர் அகமதாபாத்திலிருந்து 455 கி.மீ.

No comments:

Post a Comment