Tuesday, December 9, 2014

இந்து தர்மமும் விஞ்ஞான முறையும்!!! (தமிழில்)


உலகம் உருவாக உதவிய அதிர்வெடித் தத்துவம்(Big bang theory) என்னும் விசையை(Force) நாற்பது ஆண்டுகள் முன்னர் ஸ்டீபன் ஹாக்கிங்(Stephen hawking) கூறினாரா? அல்லது பத்து ஆயிர வருடம் முன்பே இந்து தர்மம் புரானங்கள் கூறியதா????????


பரிணாம வளர்ச்சி த்துவத்தை (Evolution theory), சார்லஸ் டார்வின் (charles darwin ) என்பவர் நூற்றி ஐம்பது வருடம் முன்பு கண்டுபடித்தாரா அல்லது ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் புலவர் திருநாவுக்கரசர் தனது சிவபுராணத்தில் கூறினாரா?? (http://tamilnation.co/sathyam/east/thirumurai.htm)


சார்லஸ் டார்வின் இனங்கள் தோற்றம் (origin of species) என்னும் தத்துவதில் " உலகில் பிறந்த முதல் உயிர்" கடலில் தோன்றி பின்பு பரிணாமம் அடைந்து நிலத்தில் தோன்றி, மனிதனாய் பிறந்தது என்று கூறியதா?? அல்லது இதையே நாம் வழிபடும் விஷ்ணுவின் தசாவதாரங்கள் பல ஆயிர வருடம் முன்பே விளக்கினவா??


இந்து சமையத்தில் வழிவந்த முனிவர்களால், ஜோதிடம் முலம், மண்ணில் இருந்து உருவாக்கும் ஒவ்வொரு உயிரின் பிறப்பு நேரத்தை வைத்து மண் கோள்கள் திசையை ஒப்பிட்டு "ஒரு உயிர் தன் வாழ்வில் நடக்க இருக்கும் அனைத்து மாற்றங்களையும் துல்லியமாக கூறுவதை ஏன் இன்று உள்ள நவீன விஞ்ஞானத்தால் கூறுமுடியவில்லை??


கலிலியோ (galileo) பூமி உருண்டை என்று நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் கூறினாரா? அல்லது ஆயிரத்தி ஐந்நூறு வருடம் முன்பே ஆர்யபட்டா என்னும் இந்து மத விஞ்ஞானி கூறினாரா?


கணித சாஸ்திரம்(Mathematics) அடிப்படையான எண்கள்(Numbers) பல ஆயிர வருடம் முன்பே இந்து மதத்தில் இருந்ததா?? அல்லது வந்தேறி துலுக்க மன்னர்கள் இந்தியாவின் செல்வதை கொள்ளைடிக்கும் பொழுது இந்து மத எண்களையும் கொள்ளைடித்துவிட்டு பத்தாம் நூற்றாண்டிக்கு பிறகு அதை " அரேபிய எண்கள்" என்று போலியாக உலகிற்கு அறிமுகம் செய்தார்களா?(http://en.wikipedia.org/wiki/Arabic_numerals)


ஜெர்மனி சேர்ந்த காட்பிரைடு (Gottfried Leibniz) என்ற பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த விஞ்ஞானி இருமக் குறிமுறை(Binary code) கண்டுபிடித்தாரா? அல்லது கணிப்பொறி அடிப்படையான இருமக் குறிமுறை(Binary code) என்பது பல ஆயிர வருடம் முன்பே ரிக் வேதத்தில்(Rig veda) கணிதமுறையில் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளதா?

பரப்பளவை(Area) கனக்கிடும் ஃபிபனாச்சி தொடரின் எண்ணிக்கை (Fibonacci Series) என்பதை பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலி கணித சாஸ்திரி லியோனார்டோ ஃபிபனாச்சி(Leonardo Fibonacci) கண்டுபிடித்தாரா அல்லது பல ஆயிர ஆண்டுகளாக நாம் வழிபடும் இந்து மத குபேர கடவுள் தனது செல்வதை கணக்கிட இந்த வகை எண்கள் தொடரை பயன்படுத்தி உள்ளதாக ரிக் வேதத்தில் எழுதி உள்ளதா?
http://en.wikipedia.org/wiki/Fibonacci_number#Origins


சர் ஐசக் நியூட்டன் (issac newton) முன்னூறு ஆண்டுகளுக்கு முன் ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தாரா? அல்லது இந்து மத விஞ்ஞானி பட்டாச்சார்யா இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஈர்ப்பு விசையை கண்டுபிடித்து , அவரது சூர்ய சித்தார்த்தாவில் புத்தகத்தில் எழுதி வைத்தாரா??http://en.wikipedia.org/wiki/Surya_Siddhanta


நியூட்டனின் மூன்றாவது விதி என்று கூறபடும்: ஒவ்வொரு நடவடிக்கையும், ஒரு சமமான எதிர்வினை உண்டு என்று இசாக் நியூட்டன் கூறினார். இதையே நமது இந்து நாகரிகம் தொடங்கிய பின் " ஒவ்வொரு புண்ணிய - பாவ நடவடிக்கையும், ஒரு சமமான சொர்க்க - நரகம் வினை உண்டு என்று கருட புராணத்தில் சொல்லி இந்து மக்களை நல்வழியில் நடக்க செய்ததா?


மைக்கல்சன் & மார்லே (machelson & morley) என்பவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒளியின் வேகத்தை (1 வினாடிக்கு = 186000 மைல்கள்) என்று கணக்கிட்டார்கள், இதையே நமது "ரிக் வேதம்" பல ஆயிர வருடம் முன்பு இவர்களின் பரிசோதனையை விட மிக மிக துல்லியமாக (1 வினாடிக்கு = 185822 மைல்கள்) என்று கூறி உள்ளனர். நிலையான ஒளியின் வேகம் (1 வினாடிக்கு = 185789 மைல்கள்) ஆகும்.


விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அவர்கள் E=m.c^2 என்ற சக்தி உருவாக்கம் சூத்திரத்தை(formula) இருபதாம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார். ஆனால், இந்த சூத்திரத்தை அவர் பகவத்கீதையை படித்த பின்பே அவரால் கண்டுபிடிக்க முடிந்தது என்று அவரே தன் வாயால் பல முறை ஏற்றுக்கொண்டார்.


அந்த காலத்தில் இருந்தே, நம் விடுகளில் வைத்து வழிபடும் ஸ்ரீ ஜெயேந்ரங்களை என்னும் தங்க விகிதம் அளவுகள்., கணித அறிஞர் பிதாகரஸ்(Pythagoras) மற்றும் யூக்ளிட் (Euclid) கண்டுபிடித்தார் என்று கூறிபட்டுள்ளது. 


வானவிலில் எழு நிறங்கள உடையது என்று சில நுற்றாண்டு முன்னர் தான் சொல்லப்பட்டது. ஆனால், நமது சுர்யபகவான் எழு குதிரை கொண்ட தேரை வைத்து இருப்பார். அதில் ஒவ்வொரு குதிரையும், வானவிலில் ஒவ்வொரு நிறத்தை கூறிக்கும் என்ற இந்துகளின் பல புராணங்களில் எழுதி உள்ளது.


மின் காந்த சக்தி மொத்தம் ஒன்பது வகை என அறிவியல் கூறுகிறது, ஆனால், இதை இந்து சமையம், சக்தி மாதா கடவுளை ஒன்பது விதமாக வழிபடுகிறது.


விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்த பின்பே தொலைநோக்கி முலம் சூரியனின் இடம் இருந்து கோள்களின் தொலைவை அளக்கமுடிந்தது, ஆனால், ஆயிரத்து ஐந்நூறு
வருடம் முன்பே ஆரியபட்டா, ஒவ்வொரு கோள்களின் தொலைவை துல்லியமாக கண்கிட்டுவைத்து அதை எழுதி உள்ளார்.


இந்து மதத்தில் அன்றே " சனி கோள்ளை" நாம் அந்த கோள்ளின் காந்த சக்தியை உணர்ந்து, நம் முன்னோர்கள் அதன் பூமி நோக்கும் பாதையில் கோவில் கட்டி வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது


சதுரங்கம் விளையாட்டு ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து உலகிற்கு அறிமுகபடுதபட்டடு என்று பாரசீக துலுக்கர்கள் கூறினார்கள், ஆனால், இந்த சதுரங்கள் விளையாட்டு இருபது ஆயிர ஆண்டுகள் முன்பே கிருஷ்ணா பரமாத்மா ராதையுடன் விளையாடினார் என்று விஷ்ணுபுராணத்தில் கூறபட்டு உள்ளது.


"
சுஸ்ருதா சம்ஹிதா" என்னும் புத்தகம் -அறுவை சிகிச்சை தந்தை என்று அழைக்கபடுகிறது. இது இரண்டு ஆயிரமத்தி ஐந்நூறு ஆண்டுகள் முன்னரே இந்து மத ஆயுர்வேத மருத்துவம் என்று எழுதப்பட்டது. இதில் கீறல், வெட்டி, ஒட்டுதல் போன்றவைக்க மருத்துவ கருவி குறிப்புகளும் இதில் அடங்கும், மேலும், முலிகை தாவரமே அணைத்து வியாதிகளுக்கும் பயன்படுத்தினர், இதையே, தற்கால நவீன திராத வியாதிகளுக்கு பயன்படுத்த வலயுருதுகின்றன. இது போல, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும் "சுஸ்ருதாவில்" குறிப்பிடப்பட்டுள்ளது..
(
http://en.wikipedia.org/wiki/Sushruta_Samhita).


ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய "அவதார்" என்னும் வார்த்தை "சமஸ்கிரிததில் இருந்தே எடுக்கபட்டது. அது போல, இத்திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் "இராமயணத்தில்" இருந்தே எடுக்கப்பட்டது என்று கூறி உள்ளார்.

http://www.deccanherald.com/content/49204/avatars-links-ramayana-amp-ramkin.html

"
பகவத்கீதை, இராமாயணம் போன்ற பல இந்து மத புராணங்களை படித்து, இது போல , பல கண்டுபிடிப்பை, நாம் வெளிக்கொண்டு வருவோம், மேலும், இதை அடிப்படையாக வைத்து இன்னும் நிறைய கண்டுபிடிப்பை, நாம் உலகறிக்கு பரிசாக கொடுப்போம். 


இது போல, பல கண்டுபிடிப்புகளை நமது முன்னோர்கள் கண்டுபிடித்தனர், ஆனால், அதை வெளிநாட்டவர்க்கு நாம் தாரை வார்த்து கொடுத்து உள்ளோம். தவறு அந்த வெளிநாட்டவரிடம் இல்லை. நம்மிடமே உள்ளது, குண்டுசட்டியில் குதிரை ஓட்டுவதை விட்டுவிட்டு, என்று நமது முன்னோர்களில் கண்டுபிடிப்பை உலகத்திற்கு உரக்க சொல்கிறோமே, அதுவே, நமது முன்னோர்களுக்கு, நாம் செய்யும் நல்ல கடமையாகும்

No comments:

Post a Comment