இங்கிலீஷ் பேசுனாலும் தமிழன்டா ..
1.லஞ்சம் வாங்குறாங்களேனு கூப்பாடு போடுவோம் ,ஆனா நமக்கு காரியம் ஆகனும்னா லஞ்சம் குடுக்க யோசிக்கமாட்டோம்...
2.தீமிதிக்கிறப்ப, முன்னால ஓடினவன் கால் தடத்தை ஃபாலொ பண்ணி நாலே ஜம்ப்ல தாண்டிடுவோம்..
3.வாசல்ல எறும்புக்கு தீனியா அரிசிமாவு கோலம் போடுவோம்! வீட்டுக்குள்ள பூச்சி மருந்த தெளிச்சு கொன்னுடுவோம்..
4.இந்தியாவை தவிர மத்த எல்லா நாடும் சொர்க்கம்னு நினைபோம் .
5.ஃபாரின் போய்ட்டு வர்றவன்கிட்ட கோடாலி தைலம் வாங்கி வர சொல்லி நச்சரிப்போம் ..
6.புதுசா கார் வாங்கி சீட்ல இருக்குற பாலித்தீன் கவர கிழிக்காமலே கார்ல சுத்துவோம்
7.அடுத்த முதல்வர கோடம்பாக்கம் சாலிகிராமம் பக்கம் சல்லடை போட்டு தேடுவோம் ..
8.பெண்களை கடவுளாக வணங்குவோம்.பெண்களுக்கு33%இடஒதுக்கீட்டை எதிர்ப்போம்
9.சென்னைக்கு மிக அருகில் அப்டின்னு சொல்லி திண்டிவனத்துல இருக்குற ஃப்ளாட்ட காமிப்போம்...
10.கூல்டிரிங் பெட் பாட்டில வாட்டர் கேனா யூஸ் பண்ணுவோம்
11.உரிமையை கடமையாகவும்,கடமையை உரிமையாகவும் எடுத்துகிட்டு குழப்பிக்குவாங்க
12.மார்கழி மாசம்..கோவில்ல புனல் ஸ்பீக்கர கட்டி..நாலாப்புறமும் ஒரு பயலையும் தூங்க விட மாட்டோம்
13.ஷாப்பிங் மால்ல மறுபேச்சில்லாம பொருள் வாங்கிட்டு வெளில இளனி விக்கறவன்ட பேரம் பேசுவோம்
14.சினிமாக்காரன் விளம்பத்துக்கு வந்தா பினாயிலா இருந்தாலும் வாங்கி குடிப்போம்
15.வெளிநாட்டுக்காரன்னாலே புத்திசாலின்னு நெனைக்கறது
16.கோவிலில் சாப்பாட்டை பிரசாதம் என்றுசொல்லி வீட்டுக்கும் PARCEL வாங்குவது..
17.செக்ஸ்ஸ பத்தி வாய்கிழிய பேசுவோம் ஆனா காண்டம் வாங்க தலைய சொரிஞ்சுட்டு நிப்போம்..
18.அனுஷ்கா வந்தா ஜோதிகாவ மறப்போம்,சமந்தா வந்தா அனுஷ்கா மறப்போம்,நஸ்ரியா வந்தா சமந்தாவ மறப்போம்
19. 26 எழுத்து கொண்ட ABCD வரிசையாக சொல்லுவோம் ,ஆனா18 எழுத்து கொண்ட கஙசஞ மாத்தி கூட சொல்ல மாட்டோம் .
20.இண்டர்நெட் கனக்க்ஷன் இருக்கும் அல்லது நெட் பேக் தீரும் வரைதான் மக்கள் போராட்டம், பெண்ணியம் , ஜாதி கொடுமை , மனித நேயம் பற்றி பேசுவோம் நெட் பேக் தீர்ந்த பிறகுலாக் அவுட் செய்து விட்டு தூங்கி விடுவோம்.
No comments:
Post a Comment