Friday, December 12, 2014

Our dreams

நியூட்டனும் அசோக மன்னரும் :

இந்தப் பதிவுகளைப் படிக்கும் சிலர் இதெல்லாம் கட்டுக்கதை என்றும் வாதம் செய்கின்றனர் !!! இன்றைய அறிவியல் புத்தகங்களை மட்டும் படித்து விட்டு பேசுபவருக்கு நான் சொல்லும் விஷயங்கள் எல்லாம் கட்டுக்கதை போல் தான் தோன்றும்!!!

தமிழில் உபநிடதங்கள் பற்றிய நூல்களில் ராமகிருஷ்ணா மிஷன் புத்தகத்தின் தொடக்கத்தில் உள்ள ஒரு தகவல் மிக்க சிந்தனைக்குரியது !! அது '' புவியீர்ப்பு விசை என்பது அது கண்டறியப் படுவதற்கும் முன்பே இருந்து வந்தது!!'' என்பதே!! இன்னமும் தெளிவாகச் சொன்னால் இயற்கை சக்திகள் எல்லாம் எப்போதுமே இருந்து கொண்டேதான் உள்ளன!! நம் விஞ்ஞானிகள் ஏதோ ஒரு காலகட்டத்தில் அதைக் கண்டறிகின்றனர் அவ்வளவுதான்!!

நாமெல்லாம் அறிவியல் புத்தகங்களில் படித்த விஷயம் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தது ஐசக் நியூட்டன் என்பதே!! இது இந்த நூற்றாண்டுகளில் நிகழ்ந்ததால் இதுவே உண்மையாகிப் போனது!! ஆனால் அது உண்மையல்ல!!

மாமன்னர் அசோகர் பற்றி நாமெல்லாம் வரலாற்றில் படித்திருப்போம் சாலைகள் அமைத்தார் மரம் நட்டார் என்று!! ஆனால் அவர் விஞ்ஞானத்தில் நாட்டமுள்ளவராகவும் இருந்தார் என்பது நாமறியாத தகவல்!! கலிங்கப் போருக்குப் பின்னால் அமைதி வழிதேடி புத்த மதத்தில் இணைந்தார் அசோகர்!! ஆயினும் அவர் விஞ்ஞான ஆராய்ச்சிகளில் ஈடுபாடு கொண்டவராகவே இருந்தார்!!

அவர் பாரத நாட்டின் தலை சிறந்த விஞ்ஞானிகள் 9 பேரை ஒருங்கிணைத்து ஒரு அமைப்பை உருவாக்கினார் !! அது 9 விஞ்ஞானிகளின் ரகசியக் குழு (THE SECRET SOCIETY OF NINE) என்று சொல்லப்படுகிறது!! அவர்களை மக்கள் தொடர்பில்லாத தனியிடத்தில் வைத்து தேவையான வசதிகளை செய்துதந்து ஆராய்சிகள் மேற்கொள்ள ஊக்குவித்தார்!!! அவர்கள் ஆராய்ச்சி செய்து பல விஞ்ஞான உண்மைகளையும் கண்டறிந்தனர்!! அதில் அவர்களால் எழுதப்பட்ட ஒரு நூலின் பெயர் என்ன தெரியுமா??

'' THE GRAVITATION''
புவியீர்ப்பு விசை என்பதே அந்த நூல்!! இவ்வாறான ஆராய்ச்சிகள் அழிவு வேலைகளுக்கு பயன்படலாம் எனக் கருதியே அக்காலங்களில் ரகசியமாக வைக்கப்பட்டன!! இன்றும் அந்த நூலின் மூலப் பிரதி எங்கேனும் பீகார், நேப்பாளம் அல்லது லடாக்கிலுள்ள புத்த விஹாரங்களிலோ அல்லது சீனாவிலோ அடையாளம் காணப்படாமல் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது!!!

No comments:

Post a Comment