Friday, December 19, 2014

'குழந்தை பிறக்கும் நாள் கணிக்கும் முறை - Natural Child Birth Date



பொதுவாக பெண்களுக்கு கர்ப்பம் தரித்தவுடன் குழந்தை எப்போது பிறக்கும் என்பதை அறிந்து கொள்ள அனைவருக்கும் ஆர்வம் இருக்கும்.

இதற்காக மருத்துவர்களை நாடும் போது அவர்கள் பொதுவாக கர்ப்ப கால கணக்கில் குறிப்பிட்டுள்ள முறைப்படி குழந்தை பிறக்கும் நாளை கணித்துக் கூறுவார்கள்.
இன்றைய காலத்தில் இந்த கர்ப்பகால கணக்கும் அதில் உள்ள சூட்சுமம் அனைவரும் அறியாததால் இயற்கையான பிரசவம் என்ற நிலை மாறி சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சையில் குழந்தை பிறக்கும் நிலையும் அதன் சதவிகிதமும் அதிகரித்து வருகின்றது.

கருத்தரிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கருப்பையில் குழந்தையின் வளர்ச்சி முதிர்வடைந்தவுடன் இயற்கையாக பிறக்க வேண்டும் என்பதுதான் மனித உடலின் அமைப்பாகும். ஆனால் இன்றைய அறிவியல் உலகின் மருத்துவ முறையின் மருத்துவர்கள் சிலரால் அறுவை சிகிச்சை என்னும் நிலைக்கு ஆளாகின்றனர்.

கர்ப்பகால கணக்கில் கூறப்படும் 40 -வாரம் [ 280 -நாட்கள் ] என்பது பொதுவானதாகும்.
இதில் ஆண் குழந்தையாக இருந்தால் முன்பே பிறந்து விடும்.
பெண் குழந்தையாக இருந்தால் இந்த கணக்கில் கூறப்படும் நாட்களுக்குப் பின்புதான் பிறக்கும்.
ஆனால் மருத்துவர்கள் நாட்களை முன், பின்னாக கணித்து சிசேரியன் என்னும் அறுவை சிகிச்சை வரை கொண்டு செல்கின்றனர்.
எனவே மேலே இதனை கணிக்கும் முறையை தனியே பதிவு செய்துள்ள விபரங்களை கவனமாக படித்து கர்ப்பகால கணக்கை கணித்து அந்த நாள் வரை காத்திருங்கள்.
நாட்கள் தாமதம் ஆனாலும் பயம்,கவலை அடைய வேண்டாம்.
இயற்கையான பிரசவ வலி வந்து சுகப்பிரசவம் [Normal Delivery ] ஆகும்.

No comments:

Post a Comment