திருநீறு (விபூதி )
எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவர் என்னும் தத்துவத்தை உணர்த்தி, நாமும் இதுபோல்தான்; ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துகிறது. சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது. திருநீர் அணிவதைப் பற்றிக்கூறும் போது சில நேரங்களில் ஈரமான விபூதி அணிய வேண்டுமென்றும் , சில நேரங்களில் ஈரமில்லா திருநீர் அணிய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். இது முரண்பாடாக உள்ளதே என்ன்று கருதலாம். திருநீர் அணிந்தவர்களை கண்டால் மனதுக்குள்ளாவது இகழும் இக்காலத்தில் இந்த முரண்பாடுக்கு விளக்கம் கூறுவது , மிகவும் அவசியம். நம் முன்னோர்கள் இதற்கு பதில் சொல்லவில்லை என்றாலும் திருநீறின் மருத்துவ குணங்களை பற்றி அவர்கள் நன்கறிந்திருந்தனர். அதிகாலையில் எழுந்து கை, கால், முகம், கழுவி, திருநீர்ச்சட்டியிலிருந்து ஒரு பிடி எடுத்து நெற்றியிலும் , பின் மாறிடத்தும் .இரு புஜங்களிலும் சில வர்மஸ்தானங்களிலும் பாட்டனும் பாட்டியும் பூசிக்கொள்ளவதை சிலராவது பார்த்திருப்போம் . மாலைப் பொழுதிலும் இவ்வாறு கை,கால்,கழுவி வந்து நனைக்காமல் திருநீர் பூசுவதுண்டு, ஆனால் குளித்த ஓய்ந் திருநீர் எடுத்து நணித்து உடலில் பூசி வந்தனர் . இப்படி இரண்டு வகையான திருநீர் பூசும் முறை பார்க்கும் போது நாம் புரிந்து கொள்ள வேண்டியது நனைக்காத திருநீருக்கு அணுக்களை அழிக்கும் சக்த்தியும் நனைத்த திருநீருக்கு உடலில் மிகையாக உள்ள ஈரத்தை உறிஞ்சி அகற்றும் சக்தியும் உண்டென்பதாகும். இவ்வளவும் அறிந்த பின் ,நம் உடலில் காலையிலும் , மாலையிலும் மட்டும் ஏன் அணுக்களின் பாதிப்பு உண்டாகின்றது என்பதை கவனிப்போம் .இரவு ஒரு நேரம் ஒரு நபர் தூங்கும் போது அவர் படுக்கையில் லட்சக்கணக்கான அணுக்கள் பரவியிருக்கும் என்று விஞானம் கூறுகிறது.அதே போல் மாலை நேரத்தில் சுற்று சூழலில் எண்ணற்ற நோயனுக்கள் உலாவுகின்றன என்பது அறிவியலின் உறுதியான கண்டுபிடிப்பு . அதனால் காலையும் மாலையும் நோயனுக்களின் பாதிப்பு ஏற்படாமலிருக்க ஈரமில்லாத திருநீரை அணிந்து வருகின்றனர். குளிக்கும் நேரம் உடலின் மூட்டுகளில் ஈரம் காரணமாக நீர் கட்டு உருவாகவும் காலப் போக்கில் அது வாயிலாககொழுப்பு அதிகரிக்கவும் அது மூட்டு வாதமாக மாறவும் வாய்ப்புண்டு .இப்படி உருவாகும் நீர்க்கட்டி தவிர்ப்பதற்க்காகத்தான் குளித்த உடன் ஈரமான திருநீர் அணிவது அணியும் காரணம்.
மற்றொரு விளக்கம் - மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.
மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும். ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள்.
மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான். இது தொடக்கம். நீறில்லா நெற்றி பாழ். என்பார்கள். எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல் என்பார்கள். சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும் போது அது நீறத்துவங்கும் கொதிக்கும், நெருப்பு இல்லாமல் புகையும், அதில் நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை. அதை நீற்றுதல் என்பார்கள். அதை போல நீற்றி எடுக்கப்பட்டது திருநீறு. [தொகு]ஆக்ஞா (நெற்றி) தியானம் மேலும் நெற்றி என்பதை இதே போல நீற்ற வேண்டும், நீறிக்கொண்டிருக்க வேண்டும், அதாவது சுண்டு விரலை நமது நெற்றிப்பொட்டில் தொட்டும் தொடாமலும் நேராக பிடித்தால் நெற்றியில் ஒருவித உணர்வு ஏற்படும். அந்த உணர்வை அப்படியே வைத்து தியானம் செய்யவது ஆக்ஞா (நெற்றி) தியானம், இது குண்டலினி யோகாவின் தொடக்கம், இதை வேதாத்ரி மகரிஷிஸ ஈஷா யோகோ போன்ற இடங்களில் சென்றால் சொல்லித்தருவார்கள். பண்டைய சித்தர்கள் சொல்லிச்சென்ற உயிர் வளர்ப்பு முறையின் தொடக்கம் இது. இதை
முறையாக செய்தால் நம் சிந்தனைகள் சீர்படும், மற்றவரை விட அதிகமாக சிந்திக்கலாம். மனம் ஒருநிலைப்படும். எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும், காரிய சித்தி உருவாகும். இதை முறையாக செய்யவேண்டும், இந்த தியானம் செய்தால் கண்டிப்பாக சாந்தி தியானமும் செய்யவேண்டும், இல்லையென்றால் அது ஒற்றைத் தலைவேதனையில் கொண்டுவந்து விட்டுவிடும். இதை நம்மிலேயே வைத்துக்கொண்டு செய்யாமல் இருப்பது பாழ். அதுதான் நீறில்லா நெற்றி பாழ். கற்றது கையளவு கல்லாதது உலகளவு பலன்கள் திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும். இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார். கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா வினைகளும் சாரும் சிவகதி சிங்கார மான திருவடி சேர்வரே!
No comments:
Post a Comment