Wednesday, September 9, 2015

தமிழர்களின் பெருமையை பகிர்ந்து கொள்ளுங்கள்.


இந்த படத்தை எடுக்கும் போது நான் ஆச்சரிய பட்ட விஷயம்.
இது வழக்கமான சூரியன் மறையும் படம் தானே. ஆனால் இதில் என்ன விந்தை இருக்கிறது என நினைக்கிறீர்களா ?
சொல்கிறேன் கேளுங்கள்.
அனைவருக்கும் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் என தெரியும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நான்கு திசைகளுக்கு நான்கு கோபுரங்கள் உள்ளதே அப்படியென்றால் சூரியன் மேற்கு கோபுரத்திற்கு நேராக தானே மறைய வேண்டும் ? இப்படி தென் மேற்கில் மறைகிறதே ?
உங்கள் அனைவருக்கும் தெரியும் உலகம் உருண்டையானது என கலிலீயோ 300 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கண்டு பிடித்தார். பூமி 23.5° டிகிரி சாய்வாக சுற்றுகிறது என நூறாண்டுகளுக்கு முன்னர் தான் கண்டு பிடித்திருப்பர்.
ஆனால் நம் தமிழர்கள் 3600 ஆண்டுகளுக்கு முன்னரே மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட ஆரம்பித்து விட்டனர். அன்றே தெள்ள தெளிவாக கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என 360° கோணத்தில் சரியாக 23.5° கணக்கிட்டு கட்ட ஆரம்பித்துள்ளனர்.
அன்று எந்த கருவியை கொண்டு விஞ்ஞானமும் புவியியலும் கணிதமும் கட்டிடக்கலையும் கண்டறிந்தனர் ?
நான் எடுத்த இந்த படம் கூட கோணலாக இருக்கலாம். ஆனால் குலசேகர பாண்டியன் கட்ட ஆரம்பித்த இந்த கோவிலில் எந்த கோணலும் இருக்காது. பாருங்கள் சூரியன் சரியாக மேற்கிலிருந்து 23.5° டிகிரி சாய்வாகவே மறைகிறது.
300 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயனுக்கு தெரிந்த விஞ்ஞானத்தை 3600 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்து வைத்துள்ளனர் தமிழர்கள்.
கோவிலை கட்ட ஆரம்பித்த குலசேகர பாண்டியனுக்கும் கிழக்கு கோபுரத்தையும் மேற்கு கோபுரத்தையும் நேர் கோட்டில் கட்டிய சுந்தரபாண்டியன் மற்றும் பராக்கிரம பாண்டியனுக்கும் தலை வணங்குவோம்.
தமிழர்களின் பெருமையை பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment