Thursday, September 24, 2015

புரட்டாசியில் அசைவம் கூடாது... ஏன் தெரியுமா?


புரட்டாசி மாதத்தில் அசைவம் விலக்கி பெருமாளை சேவிக்க வேண்டும் என பல குடும்பங்களில் வழிவழியாக கடைபிடித்து வருகிறார்கள். அவர்களுக்கே அதற்கான காரணம் தெரியாது. பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி அதனால் அசைவம் கூடாது என்று தான் பலரும் நினைக்கிறார்கள்...
ஆனால் அதற்கு வேறு சில காரணங்கள் இருக்கிறது.
புரட்டாசி மாதம் வெயிலும், காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். ஆனாலும் பூமி குளிர மழை பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். ஆனால் சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள்.
இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் அதிக கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். அசைவம் உண்பதால் வயிறு உபாதைகள் உண்டாகும். அஜீரண கோளாறுகளால் எந்த வேலையும் செய்ய முடியாமல் அதே நினைவாக இருக்கும். இதனால் சோம்பல்,மறதி,சலிப்பு உண்டாகும். இது கோபத்தையும்,காமத்தையும் அதிகம் தூண்டும். அதனால் உடல்நலம் கெடும்.
அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர் நம் முன்னோர். அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை, திடீர் வெப்ப மாறுதல் ஆகியவை நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல், சளி தொந்தரவு அதிகரிக்கும்.
துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர். துளசி தீர்த்தம் பெருமாள் கோவிலில் தனி சிறப்பு என்பதை நாங்கள் சொல்லவும் வேண்டுமோ ..!
இப்போது தெரிந்து கொண்டீர்களா நண்பர்களே..!!!
பலரும் அறிய பகிருங்கள் நட்புறவுகளே..!!!
-தமிழன் வருவான்

No comments:

Post a Comment