Thursday, September 3, 2015

உலகிலேயே வேறு எங்கும் காணப்படாத இயற்கை அறிவு சார்ந்த டெக்னிக்!!!

பல ஆயிரம் ஆண்டு களாக தமிழன் பயன்படுத்தி வந்த
ஊருணி டெக்னிக், 
‘கல்யாணம் கட்டிக்கிட்டு இந்த ஊருக்கு நான்
வரும்போது, குடி தண்ணிக்கு நாய் அலைச்சல் பேய்
அலைச்சல்தான். இப்ப ரெண்டு வருஷமாதான்
தண்ணி பஞ்சமில்லாம சந்தோஷமா இருக்கோம்.
எல்லாத்துக்கும் காரணம் அந்த மகராசன்தான்…
செலவே இல்லாம எங்களுக்குச் சுத்தமான தண்ணீ
கெடைக்குது. தவிச்ச வாய்க்கு தண்ணீ தந்த அந்த
மகராசனை மறக்கவே மாட்டோம்”
- சென்னைக்கு அருகே திருக்கழுக்குன்றம்
பக்கத்திலிருக் கும் எடையூர் கிராமம் கைகூப்பிக்
கொண்டிருக்கிறது. அந்த மகராசன்…
ஜெர்மனியிலிருந்து இங்கே வந்து இறங்கிய டிர்க்
வால்த்தர்.
நிலவியல், தண்ணீர் மேலாண்மை ஆகியவற்றில்
தலா ஒரு எம்.எஸ்.சி பட்டம் பெற்றிருக்கும் இந்த
வால்த்தர், தமிழகத்தில் தண்ணீர்
மேலாண்மையை வளப்படுத்தும் வகையில் தமிழக
அரசுடன் கைகோத்து செயல் பட்டு வருபவர். இவரின்
திட்டமே தமிழகத்தில் பல்லா யிரம் ஆண்டுகளாக
நமது முன்னோர்கள் குடிநீர் ஆதார மாக
பயன்படுத்தி வந்த ஊருணி களுக்கு (குளங்கள்)
மீண்டும் உயிர் கொடுப்பதுதான்.
அதுவும்
சுற்றுச்சூழல் பாதிப்பின்றி இயற்கை யான
வழிமுறைகளை பயன் படுத்தி, சுத்தமான
குடிநீரை கொடுப்பதோடு நிலத்தடி நீரையும்
உயர்த்துவது என்பதில் தெளிவாகவே இருக்கிறார்
வால்த்தர். இந்த விஷயத்தில் இவருக்கு பெரும்
உதவியாக இருப்பது அண்ணா பல்கலைக் கழக
சுற்றுச்சூழல் துறைதான்!
அக்கம்பக்கத்து கிராமங் களான எடையூர், கீரப்பாக்கம்,
பட்டிக்காடு என்று மூன்று கிராமங்களில்
சோதனை முயற்சி யாக தொடங்கப்பட்ட
ஊருணி திட்டம், தற்போது இரண்டு ஆண்டுகளைத்
தாண்டி வெற்றி கரமாக கைகொடுத்துக்
கொண்டி ருக்க… அடுத்தக் கட்டமாக தமிழகம்
முழுவதும் பரவலாக இந்தத் திட்டத்தை நீட்டிக்கும்
வகையில் ஏற்பாடுகள் நடக்கின்றன.
இந்தச் சாதனையின் பின்னே நிற்கும் வால்த்தரிடம்
பேச்சுக் கொடுத்தபோது, ”முழுக்க முழுக்க
இயற்கை சார்ந்த டெக்னிக்தான்
பயன்படுத்தியுள்ளோம். ஊருணிக்கு வரும்
மழை தண்ணீர் முதல்படியாக செக் டேம் ஒன்றின்
மூலம் வடிகட்டப்படுகிறது. பெரிய பெரிய
குப்பைகள் இங்கே தடுக்கப்படும்.
அதற்கு அடுத்து குளத்துக்கு செல்லும்.
குளக்கரையில் ஒரு மூலையில்
கிணறு ஒன்று உருவாக்கியுள்ளோம்.
குளத்திலிருந்து கிணற்றுக்கு தண்ணீர் செல்லும்.
இரண்டுக்கும் நடுவில் கற்கள், மணல்
ஆகியவற்றை வைத்து இயற்கை வடிகட்டி ஒன்று அமைத்துள்
தண்ணீர் வடிகட்டப்பட்டு கிணற்றுக்கு செல்கிறது.
கிணற்றிலிருந்து அடி பம்ப் மூலமாக
தண்ணீரை எடுத்து ஒரு தொட்டிக்கு அனுப்ப
வேண்டும். அந்தத் தொட்டியும்
இயற்கை வடிகட்டிதான்.
அதிலிருந்து கிடைக்கும்
தண்ணீரை அப்படியே குடிக்கலாம்” என்று சொன்னவர்,
”ஆண்டில் சில மாதங்கள் தண்ணீர்
வற்றி விடுகிறது. இதற்கு என்ன
காரணம் என்று ஆராய, குளக்கரையில்
வானிலை கருவிகளை பொருத்தியுள்ளோம்.
எங்களுடைய ஆராய்ச்சியில் கிடைத்த
முடிவுகளை வைத்து, அருகிலிருக்கும்
பட்டிக்காடு கிராமத்தில் அமைக்கப்பட்ட ஊருணி மிக
வெற்றிகரமாக செயல்படுகிறது. வருடத்தில்
ஒரு மாதம் மட்டும்தான் தண்ணீர் குறைகிறது.
எல்லாக் காலத்திலும் தண்ணீர் நிற்கும் வகையில்,
ஊருணிகளை உருவாக்குவது தான் என்
ஒரே லட்சியம். ஒரு வருட ஒப்பந்தத்தில் இந்தியா வந்த
நான், இதற்காகவே என் ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளேன்”
என்று கட்டை விரலை உயர்த்திச் சொன்னார் வால்த்தர்.
நிறைவாக பேசியவர், ”தமிழ் நாட்டில் பயன்பாட்டில்
இருந்த இயற்கை சார்ந்த தொழில் நுட்பங்கள் பலவும்
ஆவணமாக்கி வைக்கப்படவில்லை. அதில்
ஊருணி யும் ஒன்று. பல ஆயிரம் ஆண்டு களாக
தமிழன் பயன்படுத்தி வந்த ஊருணி டெக்னிக்,
உலகிலேயே வேறு எங்கும் காணப்படாத
இயற்கை அறிவு சார்ந்த டெக்னிக்”
என்று சான்றிதழும் கொடுத்தார்.
ம்… நம்ம தலையில
மூளை இருக்குங்கிறதையே ஒருத்தர்
பறந்து வந்துதான் சொல்லித் தரவேண்டியிருக்கு!...

No comments:

Post a Comment