Tuesday, February 16, 2016

An ancient papyrus Trade Agreement document written in Greek between Tamil and Roman Merchant in 2 A . D.

 · 
The World of the Ancient Tamil Merchant
Contract Document (Trade Between Ancient Tamil nadu and Rome/Greek) during Sangam age still available in Vienna Museum written in Greek.
________________________________________________
 An ancient papyrus document written in Greekand datable
in the 2nd century A.D. in a museum at Vienna has been identified as a contract for shipment of merchandise from Muciri ( ancient Tamilakam ) to Alexandria. While the document itself is not in Tamil ( i.e Tamils are well versed with Greek Language so contract itself fully in Greek only ) , one can infer from it the milieu of advanced literacy in Tamil society whose merchants could enter into such trading contracts.




ஆஸ்திரியா நாட்டுத் தலைநகரான வியன்னாவின் அருங்காட்சியகத்தில் ரோமானிய நாட்டு வணிகனுக்கும், தமிழகத்து வணிகனுக்கும் இடையில் ஏற்பட்ட வணிக ஒப்பந்தம் பாப்பிரஸ் தாளில் எழுதப்பட்டது

 வணிக ஒப்பந்தங்களில் காலத்தால் மிகப் பழமையான ஒப்பந்தம் இதுவே. முசிறி துறைமுகத்தில் பொருள் ஏற்றப்பட்டு, மத்தியத் தரைக்கடல் பகுதியில் நைல் நதி முகத்துவாரத்தில் அமைந்துள்ள அலெக்ஸாண்டிரியா நகரைச் சென்று சேருவது சம்பந்தமான ஒப்பந்தம் அது. அங்கு இருந்து மத்தியத் தரைக்கடல் வழியாக ரோம் நாட்டை அடைவதற்கு, வேறு ஓர் ஒப்பந்தம் இருந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருதுகின்றனர்.

இந்த ஒப்பந்தம் கிரேக்க மொழியில் உள்ளதால், அந்த வணிகத்தில் ஈடுபட்ட தமிழ் வணிகனுக்கு, கிரேக்க மொழி தெரிந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. அன்றைய தமிழகத்தில் கிரேக்கம் தெரிந்தவர்கள் பலரும் இருந்தனர் என்பதை நமது சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
-Tamilan

No comments:

Post a Comment