உறவினர் ஒருவர் குடும்பத்துடன் இன்று எங்களது வீட்டிற்கு வந்திருந்தார், அவர் விரைவுப்பேருந்தொன்றில் ஓட்டுனராவார், பரஸ்பர நலம் விசாரிப்பு, மதிய உணவிற்குப் பிறகு எங்கள் பேச்சு பேருந்து பற்றியதாக இருந்தது,
ஆம்னிபஸ் சர்வீஸ் பற்றியும்,அதன் நேரம் தவறாமை, உணவகங்கள் குறித்தும் பெருமையாக கூறிக்கொண்டேயிருந்தேன்,
ஏன் அரசுப்பேருந்தை இவ்வளவு கேவலமாக வைத்துள்ளிர்கள், பயணிகளிடமும் நீங்கள் கனிவாக இருப்பதில்லை, நீங்கள் நிறுத்தும் உணவகங்களில் கையூட்டு வாங்குகிறீர்கள், அவர்கள் தரமில்லா உணவை வழங்கிவிட்டு இரு மடங்காக எங்களிடம் பணம் வசூலிக்கின்றனர், கழிவறைகள் கூட மோசமான நிலையிலுள்ளது,
இவ்வாறு கூறிக்கொண்டேயிருக்கையில் எனது உறவினர் எந்தவொரு சலனத்தைக் காட்டாது புன்னகையுடன் தன் ஆதங்கத்தை ஆணித்தரமாக விவரிக்கத் தொடங்கினார்....
பேருந்தில் ஏறியவுடன் எத்தனை மணிக்கு போய்ச்சேருவோம் என்று தான் பயணிகள் கேட்கிறார்கள், பேருந்து தரமாக இல்லையென்றாலும், வேகம் குறைந்தாலும், நாங்கள் தான் காரணம் என்றே நினைக்கின்றனர். வேகத்தை பொறுத்தவரை டீசல் மைலேஜ் என்பது எங்களுக்கு நிர்வாகத்தினரால் கொடுக்கப்பட்ட டார்கெட்டுக்குள் வாகனத்தை ஓட்டியாக வேண்டும்,
நிறைய புஷ்பேக் இருக்கைகள் வேலை செய்வதுமில்லை, நிர்வாகச்சீர்கேடுகளால் பராமரிப்பு கிடையாது, பயணிகள் யாரும் இதற்கு போராடவோ அல்லது நீதிமன்றத்தை அணுகவோ தயாரில்லை,
நிறுத்தம் வந்தவுடன் இறங்கிச்செல்லும் பயணிகள் எங்களை ஏளனம் செய்வதையும் நாங்கள் பொறுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்....
சில சமயங்களில் பணிமனை திரும்பியவுடன் வக்கில் நோட்டிசோ, அல்லது மெமோவோ காத்துக்கொண்டிருக்கும், ஏதாவது ஒரு பயணி உங்கள் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரால் அசவுகிரியம் ஏற்பட்டது, வேகமில்லை, தூக்கி அடித்து பேருந்தை இயக்குகிறார்கள் என ஓலை அனுப்பியிருப்பார்....
உணவகங்களில் நாங்கள் மாபெரும் தவறு செய்கிறோம் என்பது முற்றிலும் தவறான தகவல், ஒவ்வொரு உணவகத்திற்கும் இத்தனை பேருந்துக்கள் என நிர்வாகத்தால் பிரித்து விடப்பட்டு மாதந்தோறும் ஒரு பேருந்துக்கு இவ்வளவு என லஞ்சம் பெறப்படுகிறது, நாங்கள் அந்த உணவகத்தில் நிறுத்தி உணவகங்களின் ஒப்புகைச்சீட்டை வாங்கி எங்கள் பணிமனையில் சமர்ப்பிக்க வேண்டும், நாங்கள் குறிப்பிட்ட தரமில்லா உணவகத்தில் நிற்கவில்லை என்றால் மூன்று நாட்களுக்கு டூட்டி வழங்கப்படமாட்டாது,
இதையெல்லாம் யாரும் தட்டிக் கேட்பதில்லை, தொழிலாளர்களான நாங்கள் இப்பழியையும் சுமக்கிறோம்,
தொழிலாளர் யூனியன் என்று கட்சிப்பாகுபாடுகள், எங்கள் சம்பளம் உள்ளிட்ட பலனுக்கு உள்ளுக்குள்ளேயே சூழ்ச்சிகள்,
இத்தனையும் தாண்டி கண் விழித்து வேலை செய்து ஒரு வித நெருக்கடியில் வாழ்ந்து வருகிறோம்
அரசியல்வாதிகள் எங்கள் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டும், ஒரு நாளைக்காவது மந்திரிகள் பயணம் செய்து பார்க்க வேண்டும், அப்போது புரியும் பேருந்துகளின் தரமும் எங்களின் கஷ்டமும்....
பொது மக்களே எதெற்கெல்லாமோ பொங்கும் நீங்கள் பேருந்து தரம், சாலை, கூடுதல் வழித்தடம் போன்று பிரச்சினைகளுக்கு போராடுங்கள்,
அதை விட்டுவிட்டு எங்களை குற்றம் சொல்வதில் மட்டும் குறியாக இருக்காதிர்கள்....
நீண்ட பெரு மூச்சுடன் கூறி முடித்தார்,
என்ன செய்யப்போவதாக ஐடியா பொது மக்களே....
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுக்கு தக்க நல்ல நடவடிக்கை எடுக்கும்வரை . . .
இதை பகிருங்கள் (ஷேர் செய்யுங்கள்) தோழர்களே தோழிகளே . .
No comments:
Post a Comment