Monday, February 23, 2015

ஐந்து நிமிடங்கள்

ஐந்து நிமிடங்கள்

நீங்கள் ,உங்கள் வாழ்கையில் எதை இழந்தாலும் மீண்டும் திரும்ப பெற்று விடலாம் .பொன் ,பணம், புகழ் என்று எதையும் .ஆனால் ஒன்றே ஒன்று, உங்களுக்கு தினமும் இலவசமாக கிடைக்க கூடிய அந்த ஒன்றை ,நீங்கள் எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் மீண்டும் வாங்க முடியாது .அத்துணை விலை மதிப்பற்ற ஒன்று time . ஒரு நொடியே யாயினும் இழந்தது இழந்தது தான் .மீண்டும் கிடைக்கவே கிடைக்காது .அத்தனை விலை மதிப்பற்ற ஒன்றை எவ்வளவு அலட்சியமாய் நாம் கையாளுகிறோம் .அது தான் தினமும் இறைவன் இலவசமாய் தருகிறானே (எந்த பூசாரியின் தயவும் ,அரசியல் வாதியின் சிபாரிசும் ,அதிகாரிகளின் லஞ்ச பிடுங்கலும் இன்றி )என்ற திமிர் .

நன்றாக யோசித்து பாருங்கள் .ஒரு நாளைக்கு 1440 நிமிடங்கள் .இதில் ஒரே ஒரு நிமிடத்தையாவது உருப்படியாய் உபயோகப் படுத்துகிறோமா ?.திரும்ப கிடைக்காத ஒன்றை எப்படி வேஸ்ட் பண்றோம் . இனி தினமும் ஒரு ஐய்ந்தெ ஐந்து நிமிடம் மட்டும் முதலில் நல்லபடி செலவு செய்வோம் .

தினமும் ஐந்து நிமிடம் ,அது எந்த வேளை என்றாலும் பரவாயில்லை .அப்போது என்ன வேலை செய்து கொண்டு இருந்தாலும் பரவாயில்லை .ஒரு ஐந்து நிமிடம் முழுவதும் அந்த நேரத்தில் என்ன செய்துகொண்டு இருகிறீர்களோ அந்த செயலில் மட்டும் முழு மனதுடன் இருங்கள் .வேறு எந்த சிந்தனையும் வேண்டாம் .பல் தேய்த்து கொண்டு இருந்தாலும் சரி .குளித்து கொண்டு இருந்தாலும் சரி . சாப்பிட்டு கொண்டோ ,படித்து கொண்டோ எழுதிக்கொண்டோ ,டிவி பார்த்துக்கொண்டோ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் ,ஆனால் ஐந்து நிமிடம் முழு ஈடுபாடு ,அது மட்டும் மறக்காது இருக்கட்டும் .

ஒரு வாரம் இப்படியே ஓடட்டும் .அப்புறம் ,ஐந்து ,ஐந்து நிமிடமாய் ஐந்து தடவை இப்படி இருக்க பழகுங்கள் .பின்னர் நீங்கள் முழித்திருக்கும் வேலையில் ,ஒவ்வொரு மணி நேரமும் ஒரு ஐந்து நிமிடம் இப்படி செய்யுங்கள் உதாரணமாக நீங்கள் காலை 6மணிக்கு எழுவதாக வைத்துக்கொள்வோம்
6 to 6.05 ,பின் 7 to 7.05 ...........இப்படி .

இது போல செய்து ஒரு 5நிமிடம் கவனம் சிதறாமல் ஒரு வேலையில் ஈடுபட முடிந்தால் ,நீங்கள் வாழ்கையில் எதையும் சாதிக்க முடியும் . அப்புறம் ஐந்து நிமிடத்தை 10 ஆக்குவதும் ,அதை 20 ஆக்குவதும் உங்களுக்கு எளிதாகிவிடும் .அப்புறம் என்ன !நாள் முழுவதும் முழு ஈடுபாட்டுடன் அணைத்து செயல்களும் செய்ய முடியும் .அப்புறம் வெற்றி உங்கள் கையில் தானே .அதில் என்ன சந்தேகம் .

No comments:

Post a Comment