Tuesday, November 12, 2024

பாத யாத்திரை வேண்டுதல் கடவுளுக்கா? இல்லை மூடநம்பிக்கையா?

 

பாத யாத்திரை வேண்டுதல் கடவுளுக்கா? இல்லை மூடநம்பிக்கையா?

இரண்டும் இல்லை… நம் ஆரோக்கியத்துக்கே…

நம் உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் பாதத்தில் வந்துதான் முடிகிறது.

நாம் வெறும் காலுடன் நடக்கும்போது…

கல் மண் எல்லாம் காலில் பட்டு பட்டு பாதத்தில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு செயல்படாத நரம்புகளும் முழுமையாக தூண்டப்பட்டு அனைத்து உள் உறுப்புகளும் நன்கு செயல்படும்.

இதை நம் மக்கள் ஒரு மனதோடு மனமுவந்து கடைபிடிக்க வைக்கவே தெய்வத்தின் பெயரைச்சொல்லி மனசை ஒருநிலைப்படுத்தி செய்ய வைத்தார்கள்.

இதனால் சுத்தமான காற்று உடலுக்கு பயிற்சி விரத்தால் உடல் கழிவுகள் அகற்றம் என்று ஒரே கல்லில் பல மாங்காய்கள் நமக்கு தெரியாமலே அடித்தார்கள் நம் முன்னோர்கள்

அதையே இன்று மருத்துவர் சொன்னார் என்று காலில் செருப்போ சூவோ போட்டுக்கொண்டு நாயை புடிச்சிகிட்டு காதில் குத்து பாட்டு கேட்டுகிட்டு பேய் அலையர நேரத்தில் மோட்டார் வாகன புகையுடன் நடைபயிற்சி செய்வதால் ஒரு பலனும் இல்லை…

ஆகவே ஒவ்வொரு கடவுள் பெயரைச்சொல்லி பாதயாத்திரை செய்ய வைத்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மறைமுகமாக சொன்னதுதான் பாதயாத்திரை வேண்டுதல்.

எங்க கிளம்பிட்டீங்க? பாதயாத்திரைக்கா? அப்ப சரி…

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


No comments:

Post a Comment