Tuesday, November 12, 2024

விரதம் இருப்பது வேண்டுதலா? பக்தியா? மூட நம்பிக்கையா?

 

விரதம் இருப்பது வேண்டுதலா? பக்தியா? மூட நம்பிக்கையா?

இது எதுவும் இல்லை…

நம் உடல் மெஷின் போல 24 மணி நேரமும் இயங்கி கொண்டே இருக்கும். ஒருசில உறுப்புகளைத்தவிர மற்ற எல்லா உறுப்புகளும் உறக்கத்தில் ஓய்வு எடுக்கும்.

ஆனால் வயிறு அதாவது ஜீரண உறுப்பு?

காலையில் இருந்து இரவு வரை எதையாவது வாயில் வயிற்றில் போட்டுக்கொண்டே இருந்தால் ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு எப்படி கிடைக்கும்?

வயிற்று உறுப்புகளுக்கு ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கவே…

நாம் வாரத்தில் ஒரு நாள் அம்மாவாசை ஏகாதேசி பெளர்ணமி போன்ற விஷேச தினங்களில் ஏதாவது ஒரு கடவுள் பெயரைச்சொல்லி விரதம் இருந்து ஓய்வு கொடுக்கச்சொன்னார்கள்.

ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கும்போது. அது வயிற்றில் இருக்கும் கழிவுகளை அகற்றும் வேலை செய்யும். வயிறும் சுத்தமாகும் ஆரோக்கியம் கிடைக்கும்.

அதுக்கு ஏன் கடவுள் பெயரைச் சொல்லவேண்டும்?

எல்லா மனிதர்களுக்கும் பிரச்சனை இல்லாத நிம்மதியான வாழ்க்கை என்றும் இருப்பதில்லை.

அப்போது ஏற்படும் மன சஞ்சலத்தை போக்கவும் மனதை ஒருநிலைப்படுத்தி அமைதிபடுத்தவும் ஊக்கபடுத்தவும் உடல் ஆரோக்கியம் காக்கவும் கடவுள் பெயரைச்சொல்லி ஆற்றுபடுத்தினார்கள்.

எங்க கிளம்பிட்டீங்க? விரதம் இருக்கவா? அப்ப சரி…

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


No comments:

Post a Comment