Thursday, November 14, 2024

பண்டிகைக்கும் வேப்பிலைக்கும் என்ன சம்பந்தம்?

 

பண்டிகைக்கும் வேப்பிலைக்கும் என்ன சம்பந்தம்?

ஓரு சம்பந்தமும் இல்லை.

நம் ஆரோக்கிய பாதுகாப்புக்குதான் வேப்பிலை பண்டிகையின் போது பயன்படுத்தப்படுகிறது.

வேப்பிலை ஒரு அனைத்துவகை கிருமி நாசினி என்பது நம் அனைவருக்கும் அறிந்ததுதான்.

முன்நாளில் கோயிலில் கொடி ஏற்றி பண்டிகை தொடங்கிவிட்டால்…

ஊர் முழுக்க வேப்பிலை தோரணம் கட்டி தொங்கவிடப்படும். அப்படியே ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் சொருகி வைக்கப்படும்.

காரணம் பண்டிகைக்கு மக்கள் ஒன்று கூடும் போது தொற்று வியாதிகள் பரவாமல் இருக்கவே.

கோயில் பண்டிகை கொடி ஏற்றிவிட்டால்…

உள்ளூர்காரர்கள் அசலூர் செல்லவோ… வெளியூர்காரர்கள் உள்ளூர் வரவோ அனுமதி இல்லை.

இந்த கட்டுப்பாடும் வெளி ஊரில் இருந்து தொற்றுகிருமியோ வியாதியோ உள்ளூர் மக்களிடம் பரவாமல் இருக்கவே.

ஒவ்வொரு பண்டிகை முடிவிலும் கட்டாயம் மஞ்சள் நீராட்டு உண்டு.

காரணம் தவறுதலாக நம்மிடம் ஏதாவது தொற்று கிருமியோ வைரஸ் கிருமியோ வந்துவிட்டாலும்..

மஞ்சள் நீராட்டில் அனைத்து கிருமிகளும் அழிக்கப்பட்டு நம் ஆரோக்கியம் காக்கப்படும். மஞ்சளும் ஒரு கிருமி நாசினி என்பது அறிந்ததுதானே..

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் பண்டிகையில் வெறும் வேப்பிலையும் மஞ்சளும் கொண்டு…

தெய்வத்தின் பெயரைச்சொல்லி இலவசமாகவே நம் ஆரோக்கியம் காத்தார்கள் நம் முன்னோர்கள்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


No comments:

Post a Comment