தமிழின் வலிமை,
புலமை, பெருமை, சிறப்பு…
தமிழ் என்ற மொழியின்
வார்த்தைக்கு எல்லா மொழியிலும் தமிழ்தான். அது தமிழ் மொழியின் வலிமை
இங்கிலீஷ் என்ற
மொழியின் வார்த்தைக்கே ஆங்கிலம் என்று பெயர் வைத்தவன் தமிழன். அது தமிழ் மொழியின் புலமை.
நேற்றுவரை உருவாக்கப்பட்ட
வார்த்தைக்கும் அழகு தமிழில் பெயர் உண்டு அதற்கு அர்த்தமும் உண்டு. அது தமிழ் மொழியின்
பெருமை.
ஹிந்தியை தாய்
மொழியாக கொண்டவர்கள் தங்கள் பெயருடன் ஹிந்தி என்ற வார்த்தையை இணைத்துக்கொள்ள முன் வரவும்
இல்லை, முடியவும் முடியாது.
ஆங்கிலம் முடியாது,
கன்னடம் முடியாது, தெலுங்கு முடியாது, மலையாளம் முடியாது. எந்த மொழியின் பெயரையும்
தன் பெயருடன் சேர்த்துகொள்ள மாட்டார்கள்.
ஏன் என்றால் மற்ற
மொழிகள் எல்லாம் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டது.
ஆனால் தமிழை தன்
பெயருடன் சேர்த்து தமிழன்பன், தமிழ் செல்வன், தமிழரசி, தமிழரசன், தமிழ்வாணன், செந்தமிழ்
செல்வி, என்று சொல்ல முடியும்.
தமிழர் மட்டுமே
தமிழை வெறும் மொழியாக மட்டும் எண்ணாமல் உயிராக நேசிக்கிறான்..
அதனால்தான் நம்
தமிழ் மொழி நெடுகாலம் கடந்தும் 40 ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்பும் அழியாமல் வளர்கிறது.
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி