Monday, August 31, 2015

வியக்க வைக்கும் வியர்வையின் நன்மைகள்...?

வியர்வையால் மனிதனுக்கு சில நன்மைகளும் கிடைக்கின்றது. குறிப்பாக குண்டாக இருப்பவர்களுக்கு அதிகம் வியர்க்கும். அதிகம் வியர்த்தால் தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தையும் பழகிகொள்ளலாம். ஏனெனில் வியர்வை அதிகம் வெளியேறினால், உடலின் நீர்ச்சத்தானது குறைந்துவிடும்.
அதிகம் வியர்த்தால், எப்போதும் காற்றாடிக்கு அருகிலேயே உட்காராமல் சற்று வியர்க்கவும் வழிவிடலாம். வியர்வை அதிகம் வெளியேறினால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது ஊக்குவிக்கப்படும். அதனால் தான் காய்ச்சலின் போது வியர்த்தால், காய்ச்சலானது குணமாகிவிடுகிறது.
உடற்பயிற்சியின் போது வெளிவரும் வியர்வையானது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. அதிலும் நடைபயிற்சி அல்லது வேறு ஏதேனும் உடற்பயிற்சி செய்தால், இதயமானது வேகமாக இரத்தத்தை அழுத்துவதால், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராகி, உடலின் மெட்டபாலிசமானது அதிகரித்து, உடல் எடை குறைய வழிசெய்கிறது.
வியர்க்கும் போது சருமத்துளைகளானது விரிவடைந்து, அதன் வழியே வியர்வை வெளியேறுவதால், சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, சருமத்தை பொலிவாகவும், மென்மையாகவும் மாற்றுகிறது.
உடற்பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்து வந்தால், சிறுநீரகமானது சீராக செயல்பட்டு, சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு குறையும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும், உடற்பயிற்சியில் ஈடுபடும் போது நன்கு வியர்வையானது வெளியேறினால், மன அழுத்தம், சோர்வு போன்றவை நீங்கி, மனநிலையானது
புத்துணர்ச்சி அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் உடற்பயிற்சியின் போது மூளையில் உள்ள கெமிக்கலானது ஊக்குவிக்கப்பட்டு, ஒருவரின் மனதை சந்தோஷமாகவும், ரிலாக்ஸாகவும் வைக்கவும் உதவுகிறது.

No comments:

Post a Comment