மதுரை டாக்டர் கண்டுபிடிப்பு....
தமிழகத்தில் தினமும் திருட்டு, நகைபறிப்பு நடக்கிறது. யார் குற்றவாளி என போலீசார் விழிபிதுங்கும் நிலையில், அவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் நவீன கருவியை மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர்
பழனிவேல்,46, கண்டுபிடித்துள்ளார். எம்.காம் பட்டதாரி.அவர் கூறியதாவது:இக்கருவியை லாக்கர், பீரோ, ஏ.டி.எம்., இயந்திரங்களில் பொருத்தலாம். இதில் உள்ள 'எலக்ட்ரானிக் சென்சார்', 'லாக்கரில்' உள்ள அலைபேசியுடன் இணைக்கப்பட்டிருக்கும். அத்துடன் 'லாக்கர்' இருக்கும் அறையில் கண்ணீர் புகை மருந்து சிறிய அளவில் காஸ் சிலிண்டரில் வைக்கப்பட்டிருக்கும்.அலைபேசியில் போலீஸ் ஸ்டேஷன் போன் எண், உரிமையாளரின் தொடர்பு எண்ணை பதிவு செய்யலாம். பீரோ, 'லாக்கரை' திருடர்கள் உடைத்தவுடன் தானியங்கி முறையில் சம்பந்தப்பட்டோருக்கு தகவல் தெரிவித்து விடும். மேலும் கண்ணீர் புகை தானாகவே வெளியேறி திருடர்களை மயக்கமடைய செய்வதால், குறிப்பிட்ட நேரம் வரை திருடர்களால் அந்த இடத்தில் இருந்து
தப்பிக்க முடியாது. இத்துடன் 'ஸ்மார்ட் போன்'களை இணைத்தால் 'நேவிகேஷன் சிஸ்டம்' மூலம் அலைச்சலின்றி எளிதில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விடலாம். ரூ.3300ல் இதை செய்யலாம்.
ரயிலுக்காக தானியங்கி கருவிரயிலுக்காக தானியங்கி தீத்தடுப்பு சாதனத்தையும் உருவாக்கி உள்ளேன். இதில் 'டிசி' மோட்டாருடன் கூடிய தீத்தடுப்பு சாதனம், 'டிரை காஸ் பவுடர்', தானியங்கி 'வென்டிலேட்டர்' கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இது வெப்பம் தாக்கும் போது தானாக இயங்கும்.பின், தொட்டியில் உள்ள தண்ணீர் தானியங்கி மோட்டார் மூலம் பீய்ச்சி அடிக்கும். 'டிரை காஸ் பவுடரும்' வெளியேறி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடும். மேலும், தீயில் ஏற்படும் புகையால் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படாத வகையில் தானியங்கி 'வென்டிலேட்டர்' மின்விசிறி புகையை வெளியேற்றி விடும்.அத்துடன் தீ விபத்து ஏற்படும் பெட்டியில் இருந்து டிரைவர், கார்டுக்கு தகவல் தெரிவிப்பதுடன் 'டிசி' மோட்டார் உதவியுடன் அபாய சங்கிலியை இழுத்து ரயிலையும் நிறுத்துவிடலாம். பயணிகள் பாதுக்காக்கப்படுவர். இதை ரயில்களில் மட்டுமல்ல, வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளிலும் பொருத்தலாம், என்றார்.
No comments:
Post a Comment