Thursday, August 20, 2015

தமிழர் புத்தாண்டு


சித்திரையில் தொடங்கப்படுவதே சரியானது. பண்டைய தமிழர்கள் இரண்டு அடிப்படையிலிருந்து ஆண்டுத் தொடக்கத்தைக் கணக்கிட்டனர்.
1. கதிரவனின் வடக்கு நோக்கிய நகர்வின் தொடக்கம்.
2. தலைநகருக்கு நேர்மேலே கதிரவன் வரும் நாள்.
இந்த அடிப்படையில் ஆண்டுக்கணக்கை உருவாக்கிய தமிழர் தங்களுடைய தலைநகர் மூலமதுரைக்கு நேர்மேலே கதிரவன் வரும் நாளும், வடக்கு நோக்கிய நகர்வின் தொடக்கமும் ஒன்றாக இருப்பதனால் இன்றைய சித்திரை மாதத்தை ஆண்டுத்தொடக்கமாக கொண்டனர்.
முதல் கடல்கோளுக்குப் பிறகு தலைநகர் மூலமதுரையிலிருந்து கதவபுரம் எனும் கபாடபுரத்திற்கு மாற்றம் பெற்றது. இதனால் கபாடபுரத்திற்கு நேர்மேலே கதிரவன் வரும் நாளான இப்போதைய தை மாதத்திற்கு ஆண்டுத்தொடக்கம் மாற்றப்பட்டது.
மாற்றப்பட்ட இந்த ஆண்டுமுறையே எகிப்து வழியாக உலகெங்கும் பரவி இன்று சில மாற்றங்களுடன் ஜனவரியில் தொடங்கும் கிரிகேரியன் ஆண்டாக நடப்பில் இருக்கிறது.
தை தான் ஆண்டுத்தொடக்கம் என்றால் தலைநகர் கபாடபுரத்திற்குப் பிறகு மணலூர், கொற்கை என மாறி இன்று சென்னையில் இருக்கிறது. இவைகளை கணக்கில் கொண்டால் ஆண்டுத்தொடக்கம் சித்திரையாகவும் இருக்காது, தையாகவும் இருக்காது.
இன்றைய சூழலுக்கு ஏற்ப தலைநகர் மாறும்போது ஆண்டுத் தொடக்கத்தை மாற்றுவதும் அறிவுக்குகந்ததல்ல.
ஆகவே தமிழன் காலக் கணிப்பில் ஆண்டுக் கணக்கை உலகிற்கு வழங்கிய சித்திரையை தொடக்கமாக கொள்வதே சரியானது.

No comments:

Post a Comment