Tuesday, August 18, 2015

ஓர் அதிசயத் தகவல்

ஓர் அதிசயத் தகவல்
நமது முன்னோர்கள் எல்லாம் தலைசிறந்த அறிவாளிகள். ஆனால், என்னவோ தெரியவில்லை. முன்னோர்களின் அறிவாற்றலை உணர்ந்து கொள்ளாததோடு, அவர்களுக்கு எல்லாம் ஒரு மண்ணும் தெரியாது என்று இகழ்ந்து, அவர்கள் தந்த பொக்கிஷங்கள் பலவற்றை இழந்து விட்டோம். அடுத்த தலைமுறைக்கு அந்த அற்புதத் தகவல்களை கொண்டு சேர்க்கவும் தவறி விட்டோம்.
அணுவைப் பற்றிய எண்ணம்கூட அயல்நாட்டுக்காரர்களுக்கு தோன்றாத நேரத்திலேயே அணுவைப்பற்றி அறிந்ததோடு, அதை வெளிப்படுத்தவும் செய்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.
ஓர் உதாரணம், ராமாயணம் சொல்லும் தகவல் இது. ராவணனின் மகன் இந்திரஜித் இறந்து கிடக்கிறான். அப்போது அவனைப் பார்த்து மண்டோதரி(தாய்) அழுது புலம்புகிறாள்.
அந்தப் புலம்பலில் ஓர் ஆச்சரியமான உண்மை வெளிப்படுகிறது. மண்டோதரியின் வார்த்தைகளைப் பாருங்கள்: ‘உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலுமம்மா’ (கம்பராமாயணம் & யுத்தகாண்டம்)
அணு ஆயுத செயல்பாடுகள், இப்பாடலின் ஒருசில வார்த்தைகளில் தெளிவாக விவரிக்கப் பட்டுள்ளன.
அணு ஆயுதத்தை ஏவுபவர்கள் அதற்கு உண்டான பித்தானை (ஸ்விட்சை) அழுத்துவார்கள், (உக்கிட & ஏவ), அணு ஆயுதம் சீறிப்பாய்ந்து ஓடும். (அணு ஒன்று ஓடி). சீறிப்பாயும் அணு ஆயுதம், தான் தாக்க வேண்டிய இடத்தை அடைந்ததும் அங்கே வெடித்துச் சிதறி பெரும் கேட்டினை விளைவிக்கும். (உதைத்தது போலும்).
இதைவிட ஓர் அதிசயத் தகவல், உலகெங்கும் ஆட்சி செலுத்தும் ஆங்கில மொழியில் ஒரு சதவீத அணுவிற்கு இன்னும்கூட பெயரிடப்படவில்லை. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே ஒரு சதவீத அணுவிற்குத் தமிழிலே பெயர் வைத்திருக்கிறார்கள்.
‘சாணிலும் ஊன் ஓர் தன்மை அணுவினை சத கூனு இட்ட கோணிலும உளன்’ (கம்பராமாயணம் & யுத்த காண்டம்). ஒரு சதவீத அணுவிற்குத் தமிழில் கோண் என்று பெயர்.
கதை வடிவிலேயே மெய்ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் சேர்த்துக்கொடுத்தார்கள்.
அவற்றின் உள்ளீடை (அடிப்படையை) உணராமல், அந்த அற்புதமாக தகவல்களை தூக்கிப்போட்டு விட்டோம்.

No comments:

Post a Comment