Wednesday, December 25, 2019

ஒரு ரகசியம் தெரிந்து கொள்ளுங்கள்...

ஒரு ரகசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

கோவிலில் சனீஸவரர் முன்பு எள்தீபம் ஏற்றக்கூடாது என்பதற்க்கான ஒரு ரகசியம் தெரிந்து கொள்ளுங்கள்

பிணம் எரிக்கும் பொழுது உண்டாகும் வாடை தான் எள்ளு எரியும் பொழுது வெளிப்படும்.

எனவே கோவிலில் எள்விளக்கை ஏற்ற கூடாது .

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இது தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு.

இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படுத்தும்.

எள் என்பது அரிசியைப் போல ஒரு தானியம்.

அரிசியை எரிப்போமா?

எள்ளை எண்ணெயாக்கி அந்த எண்ணெயைக் கொண்டு தீபமேற்றச் சொல்லித்தான் நமது பரிகாரமுறைகள் சொல்கிறதே தவிர எள்ளையே நேரிடையாக எரிக்க அல்ல.

எள்ளை நைவேத்தியமாகத்தான் படைக்க வேண்டும்.

மனித உருவத்தில் நமது காலத்தில் வாழ்ந்து நம் கண்முன் நடமாடிய மகான் காஞ்சித்தெய்வம் ஸ்ரீமகாபெரியவர் கூட ஒருமுறை இந்த எள் தீபம் கூடாது என்று தெளிவுபடுத்தியும் நமது கோவில்களில் இந்த முறையைத் தொடருவது துரதிர்ஷ்டம்தான்.

எள் எண்ணெய்
(ந.எண்ணை) விளக்கு அல்லது சகல தோஷத்தையும் தீர்க்கும் நெய்விளக்கு ஏற்றலாம்.

நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது.

அதே போல் மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற, தூய்மையடைந்து நற்பலனை அடைகின்றன.

நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரிய நாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாகக் கருதப்படுகின்றன.

சூரிய நாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது.

சந்திர நாடி, குளுமையைத் தருகிறது.

சுஷம்னா நாடி, அந்தப் பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு, ஆன்மீகப் பாதையை வகுக்கிறது.

நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரிய நாடி, சுறுசுறுப்பு அடைகிறது.

நெய்விளக்கு, சுஷம்னா நாடியைத் தூண்டிவிட உதவுகிறது.

பொதுவாகவே நெய் தீபம், (கடையில் விற்கும் மாட்டுக்கொழுப்பு நெய் இல்லை- சுத்தமான பசு நெய்) சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலனையும் தருகிறது.

No comments:

Post a Comment