Monday, July 18, 2016

இன்று ஒரு ஆரோக்கிய குறிப்பு . . .2

நேத்து உங்களுக்கு எந்த தண்ணிரை குடிக்க உபயோகப்படுத்தனும் என்று சொன்னேன்.
இன்று எந்த அளவு குடிக்கனும் என்று சொல்கிறேன்
கேளுங்கள்.
ஆளாளுக்கு ஒரு விதமா சொல்வாங்க. . .
சொல்வாங்கே . . .
தூங்கி எழுந்த உடன் 3 லிட்டர் குடிக்கனும் . . .
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கனும் . . .
தண்ணீர் சுட வைத்து குடிக்கனும் . . .
தினமும் 5 லிட்டர் குடிக்கனும் . . .
இது எல்லாமே டுபுக்குதான் . . .
நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். . .
தண்ணீர் தாகம் எடுத்தா குடிச்சா போதும்,
அதுவும் தாகம் தீரும்வரை குடிச்சா போதும்.
நம் உடம்புதான் மருத்துவர்.
நம் உடம்புக்குதான் தெரியும் எவ்வளவு தண்ணீர் நம் உடலுக்கு தேவை என்று. மற்ற யாருக்கும் மருத்துவரே ஆனாலும் தெரியாது. அப்படியே சொன்னாலும் அது தவறாகத்தான் இருக்கும்.
ஒவ்வொருத்தருக்கும் இந்த அளவு மாறுபடும்.
ஒருவருக்கு குளிர்ச்சி உடம்பு,
ஒருவருக்கு மிதமான சூட்டு உடம்பு
ஒருவருக்கு சூட்டு உடம்பு இருக்கும்.
அனைவருக்கும் எப்படி ஒரே மாதிரியான அளவு
தண்ணீர் தேவை இருக்கும்?
எப்படி எல்லாரும் 5 லிட்டர் குடிக்க முடியும்?
குளிர் உடம்புக்காரர்கள் எப்படி 5 லிட்டர் குடிக்க முடியும்?
அப்படியே குடித்தால் என்ன ஆகும்?
சூட்டு உடம்பு காரர்களுக்கு எப்படி 3 லிட்டர் தண்ணீர் போதுமானதாக இருக்கும்?
பற்றாக்குறைக்கு என்ன செய்வார்கள்?
அதனால்தான் சொல்கிறேன். நமக்கு வைத்தியர் நம் உடம்புதான் நம் உடம்பு சொல்றதை மட்டும் கேளுங்கள்.
ஆகவே அனைவரும் தாகம் எடுத்தா மட்டும்
தண்ணீர் குடியுங்கள். இல்லைன்னா விடுங்கள்.
உங்களுக்கு ஒன்னும் ஆகாது.
நீங்க ஆரோக்கியமா இருப்பீர்கள்.
இதில் சந்தேகம் இருப்பவர்கள் கேள்வி கேட்கலாம்.
-மரபுவழி தமிழ் மருத்துவர்

No comments:

Post a Comment