கறிக்குழம்பில்
ஏன் உருளைகிழங்கோ முள்ளங்கியோ போடுகிறார்கள்?
கறிக்குழம்பு அதிக
அமிலத்தன்மை வாய்ந்தது. அதை காரதன்மையாக மாற்றுவதற்கு முள்ளங்கி போடுகிறார்கள்.
சிறுநீரக தொற்று
கற்கள் உள்ளவர்களுக்கு கறிக்குழம்பு உபாதையை தரும். அதிலிருந்து விடுவிக்கும் நண்பன்தான்
முள்ளங்கி.
கத்திரிக்காய்
போடுவது கொழுப்பை கத்தரிக்கும் ஆற்றலுடையது என்பதால்.
புலி போன்ற மாமிச உண்ணிகளுக்கு செரிமானம் ஆவதற்கு
குறைவான நேரமே ஆகும். ஆனால் மனிதனுக்கு அசைவம் செரிமானம் ஆக 16 மணி நேரம் ஆவதால் புற்றுநோய்
போன்ற உடல் நலக்கேடுகளை தவிர்க்க உருளைகிழங்கை போடுகிறார்கள்.
ஏனென்றால் உருளைகிழங்கில்
நார்சத்து உள்ளது, மேலும் கறிக்குழம்பில் உள்ள அதிகப்படியான உப்பையும் குறைத்து சுவை
கூட்டகூடியது உருளைக்கிழங்கு.
தமிழர்களின் பழக்கவழக்கம்,
வழிபாட்டு முறைகள் மட்டுமல்ல சமையலும் அறிவியல் மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது.
நம் மரபு கலாச்சாரம்
பண்பாடு எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.
புரிந்தவர் பயன்படுத்தி
பலனடைகிறார்கள்.
புரியாதவர்கள்
பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி
No comments:
Post a Comment