நான்காவது விரலை
மட்டும் ஏன் மோதிர விரல் எங்கிறோம்?
உங்கள் பெருவிரல்
(கட்டைவிரல்) பெற்றோர்களை குறிக்கும். ஆள்காட்டி விரல் உங்கள் சகோதரசகோதரிகளை குறிக்கும்.
நடுவிரல் உங்களை குறிக்கும். மோதிரவிரல் உங்கள் வாழ்க்கை துணையை குறிக்கும். சுண்டிவிரல்
அதாவது கடைசிவிரல் உங்கள் பிள்ளைகளை குறிக்கும்.
இப்போது உங்களின்
இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக வைத்துக்கொள்ளுங்கள். நடுவிரலை மட்டும் மடித்து
உள்ளங்கையில் ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள். மற்ற விரல்களை நீட்டி மற்ற விரல்களோடு ஒன்றோடு
ஒன்று ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
பெருவிரலை மட்டும்
பிரித்துப்பாருங்கள் தனியாக விலக்கி அசைக்க முடியும். அதாவது உங்களின் பெற்றோர் எப்போதும்
உங்களுடன் இருக்கமாட்டார்கள். பிரிவுக்கு உட்பட்டது.
பெருவிரலை மறுபடியும்
ஒட்டி வைத்துக்கொண்டு ஆள்காட்டி விரலை விலக்கி பிரித்துப்பாருங்கள், முடியும் அதாவது
உங்கள் சகோதரசகோதரிகள் எப்போதும் உங்களுடன் இருக்க மாட்டார்கள் பிரிவுக்கு உட்பட்டது.
அடுத்து சிறிய
சுண்டி விரலை மட்டும் தனியாக பிரித்துப்பாருங்கள் முடியும். அதாவது உங்கள் பிள்ளைகள்
எப்போதும் உங்களுடன் இருக்கமாட்டார்கள். பிரிவுக்கு உட்பட்டது.
கடைசியாக இப்போது
உங்கள் மோதிரவிரலை மட்டும் தனியாக பிரித்து அசைத்துப்பாருங்கள் பிரிக்க முடியாது. சிரமப்படுவீர்கள்.
அதுபோல கணவன் மனைவி
எப்போதும் பிரியாமல் ஒன்றாக இணைந்து சேர்ந்து வாழவேண்டும் என்பதற்காகவே திருமணத்தில்
தம்பதிகளுக்கு மோதிரம் அணிவிக்கிறோம்.
நம் பண்பாடு கலாச்சாரம்
பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.
நம் மரபு பழக்கவழக்கம்
எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி
No comments:
Post a Comment