மாதவிடாய் நேரத்தில் பெண்கள் ஏன் கோயிலுக்கு செல்லகூடாது?
தீட்டா? மூட நம்பிக்கையா?
இரண்டும் இல்லை.
ஆரோக்கியத்துக்குதான்..
இறைவன் படைப்பில்
மனிதனே சிறந்த படைப்பாகும். மனிதரில் பெண்கள் மட்டுமே இயற்கை உடற்கூறு மாற்றம் அதிகம்
கொண்டவர்கள்.
ஒரு உயிரை உருவாக்கும்
பெரும் பங்கு பெண்களையேச் சாரும். அதனால்தான் பெண்களை தெய்வத்துக்கு சமமானவர்கள் என்று
சாஸ்திரம் போற்றுகிறது..
அந்த கால கருங்கல்லில்
கட்டப்பட்ட கோயில்கள் மனிதனின் உடல் வெப்பநிலையை பொருத்தே அமைக்கப்பட்டது.
அதாவது மனிதனின்
சராசரி வெப்பநிலை எவ்வளவோ அதே வெப்பநிலை கருங்கல்லால் கட்டப்பட்ட கோயில்களுக்கும் உண்டு.
மாதவிடாய் காலங்களில்
பெண்களின் உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில் கோயிலுக்கு பெண்கள் வந்தால்
இன்னும் அதிக உடல் உஷ்ணம் அதிகரிக்கும்.
அதனால் அதிகப்படியான
இரத்த போக்கு ஏற்பட்டு உடல் உபாதை அதிகரிக்கும்.
இதை கருத்தில்
கொண்டே நம் முன்னோர்கள் பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலுக்கு வரவேண்டாம் வரத்தேவை
இல்லை என்று சொன்னார்கள்.
மாதவிடாய் காலங்களில்
பெண்களுக்கு அடி வயிற்று வலி இருக்கும். உடம்பில் இருந்து கெட்ட இரத்தம் வெளியேறுவதால்
உடல் அசதி சோர்வு அதிகமாக இருக்கும்.
அந்த நேரங்களில்
அவர்களுக்கு பூரண ஓய்வும் தொந்திரவு செய்யாத தனிமையும் உளுந்த கஞ்சி / களி போன்ற சத்தான
உணவும் தேவை.
இதை கருத்தில்
கொண்டே நம் முன்னோர்கள் மாதவிடாய் நேரங்களில் பெண்கள் வெளியேவோ அல்லது கோயிலுக்கோ வரக்கூடாது
என்று சொன்னார்கள்.
இதை நேரிடையாக
சொன்னால் ஒருவரும் கடைபிடிக்கமாட்டார்கள். அதனால் தெய்வகுற்றம், தீட்டு, அசுத்தம் என்று
ஆண்களுக்கு பயமுறுத்தி பெண்களுக்கு முழு ஓய்வு கொடுக்கச்சொன்னார்கள்.
ஆனால் என்ன காரணத்துக்கு
சொன்னார்கள் என்பதை மறந்துவிட்டு அவர்கள் சொன்ன வார்த்தையை மட்டும் பிடித்துக்கொண்டு
மூடநம்பிக்கை என்று மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு முழு ஓய்வு கொடுக்காத காரணத்தினால்தான்
இன்று பெண்களுக்கு ஏற்படும் உடல், மனம் மற்றும் குடும்பத்தின் அனேக பிரச்சனைகளுக்கு
மூலகாரணம்.
தமிழர் பண்பாடு
கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.
எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான
மருத்துவமே…
புரிந்தவர் பயன்படுத்தி
பலனடைகிறார்கள்.
புரியாதவர்கள்
பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி
No comments:
Post a Comment