ஆன்மீகமா? மூடநம்பிக்கையா?
நம் ஆரோக்கியத்துக்குதான்…..
நவராத்திரி காலமான
புரட்டாசி ஐப்பசி அடைமழை காலம். இதனால் சிலருக்கு தோல் நோய் அலர்ஜி ஏற்படும். பருவநிலை
மாறுபடுவதால் பலருக்கு உடல் மந்தமாக இருக்கும்.
இந்த நிலையில்
உடல் உபாதையை போக்கி சீராக்கும் சக்தி புரோட்டின் சத்து அதிகம் உள்ள நவதானிய சுண்டலுக்கு
உண்டு.
அந்நாளில் நவராத்திரியின்
போது நவகிரகங்களை சாந்தபடுத்த நவதானியங்களை உபயோகித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்துக்குரிய
தானியத்தில் உணவு சமைத்து (கோதுமை, அரிசி, கடலைபருப்பு, பயத்தம் பருப்பு, கொண்டை கடலை,
மொச்சைகொட்டை, உளுந்தம் பருப்பு, கொள்ளு, எள்ளு) படைத்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவர்.
பெண்களே இதில்
முக்கிய பங்களிப்பதால் நாளடைவில் சக்தி வழிபாடாகி கொலு வைத்து அக்கம் பக்கம் உள்ளவர்களை
வீட்டிற்கே அழைத்து ஒரு விழாவாக கொண்டாடி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தானியத்தில் சுண்டல்
செய்து கொடுக்கும் வழக்கமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது.
இதனால் அக்கம்பக்கம்
உள்ளவர்களிடம் ஏற்றத்தாழ்வின்றி, கருத்து வேறுபாடின்றி சுமூக உறவை பேணவும் இந்த நவராத்திரி
பண்டிகை வழி வகை செய்கிறது.
தமிழர் பண்பாடு
கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.
எல்லாம் நம் நன்மைக்கே,
ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…
புரிந்தவர் பயன்படுத்தி
பலனடைகிறார்கள்.
புரியாதவர்கள்
பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி
No comments:
Post a Comment