Wednesday, December 25, 2024

சக்கிலசனாசனா” என்றால் என்ன என்பது பற்றி யாருக்காவது தெரியுமா?

 

61. “சக்கிசலனாசனா” என்றால் என்ன என்பது பற்றி யாருக்காவது தெரியுமா?

தெரிந்தோ தெரியாமலோ அந்த காலத்தில் நம் வீட்டு பெண்கள் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் அர்த்தம் நிறைந்து இருந்தது. ஆரோக்கியம் சார்ந்து இருந்தது.

அமராமல் குனிந்து கோலம் போடுவதால் கற்பபை பலப்படும் என்பது எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளோம்?

தானியங்கள் உரலில் குத்துவதும், அம்மி அரைப்பதாலும் கைகள் பலப்படும் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு ஏறாது.

அதே போல மாவாட்டுவதும் பெண்களுக்கு ஒரு சிறந்த பயிற்சி என்று எத்தனை பெண்கள் உணர்ந்திருக்கிறார்கள்?

மாவாட்டுவதால் தொப்பை குறையும் தசைகள் இறுகும். மாதவிடாய் தொந்திரவை சரி செய்யும்

இதுக்கெல்லாம் வீட்டில் மெஷின் வாங்கி வச்சிட்டு…

பெண்கள் தொப்பையை குறைக்கவும் கொழுப்பை குறைக்கவும் சர்க்கரை இரத்த கொதிப்பு குறைக்கவும் மூச்சு பயிற்சிக்காவும்…

கார்பரேட் கம்பெனிகளின் நவீன பிட்நெஸ் செண்டர் - உடற்பயிற்சி கூடத்தில் மாதாமாதம் காசு கொடுத்து அங்கு உள்ள மெஷினில் இதே வேலையை பயிற்சி என்ற பெயரில் செய்துட்டு வராங்க… 

என்னத்த சொல்ல?        

அதெல்லாம் சரிப்பா அந்த “சக்கிசலனாசனா”” என்றால் என்ன என்றுதான கேட்கறீங்க?

அதுதான் கார்பரேட் கம்பெனிக்காரன் தொப்பையை குறைக்க மாவாட்டுவது போல செய்யச்சொலும் யோகாசதனத்தின் பெயர்.

இதை எல்லாம் நாம் எப்போது உணர்வோம்?

நம் மரபு கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.

நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலிலும் நம் ஆரோக்கியத்துக்கான மருத்துவம் இருந்தது. மூடநம்பிக்கை இல்லை.

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

 


 

No comments:

Post a Comment