ஆடி காற்றில் அம்மியும்
நகருமா?
நகராது..
அப்புறம் ஏன் இப்படி
ஒரு சொல்லடை பழமொழி? புரியவில்லையே?
ஆடிக்கு முன் மாதங்கள்
கோடை வெயில் தகிக்கும் காலங்கள். சித்திரை கத்திரி வெயில் கொளுத்தும். அப்படி அடிக்கும்
வெயில் சூட்டால் பலருக்கும் அம்மை நோய் உண்டாகும்.
ஆடியில் வரும் காற்றும் சாரல் மழையும் குளிர்ச்சியை ஏற்படுத்தி
பூமியின் சூட்டையும் நம் உடல் சூட்டையும் தணிக்கும். அதனால் உடல் சூட்டில் அம்மை கண்டவர்கள்
உடல் குளிர்ந்து குணம் பெறுவார்கள்.
ஆகவே ஆடிக்கு பின்
அம்மை நோய் நகர்ந்து சென்றுவிடும்.அதனால்தான் ஆடி காற்றில் அம்மையும் நகரும் என்றார்கள்.
ஆனால் அச்சொற்றொடர்
சொல்வழக்கில் திரிந்து ஆடி காற்றில் அம்மியும் நகரும் என்றாகிவிட்டது.
பொருள் தெரியாமல்
சொல்லிவந்ததால் வந்த குழப்பம் இது.
நம்முடைய அனேக
கலாச்சார பண்பாட்டு பழக்கவழகத்தை இதுபோலததான் பொருள் தெரியாமல் சிதைத்துத்துவருகிறோம்.
புரிந்தவர் பயன்படுத்தி
பலனடைகிறார்கள்.
புரியாதவர்கள்
பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி
No comments:
Post a Comment