கற்பமான பெண்களுக்கு
வளைகாப்பு ஏன் செய்யப்படுகிறது?
மூட நம்பிக்கையா?
அல்லது வெறும் சடங்கு சம்பிர்தாயமா?
கருவுற்றிருக்கும்
இளம் பெண்கள் பிரசவ காலம் நெருங்க நெருங்க உடல் மாற்றத்தினாலும் பிரசவ நிகழ்வின் பயத்தினாலும்
மனதைரியத்தை இழந்து விடுவார்கள். ஒருவித பதட்டத்துடனேயே இருப்பார்கள்.
அவர்களை உற்றார்
உறவினர் சகோதரிகள் சேர்ந்து தேற்றவே சீமந்தம் எனப்படும் வளைகாப்பு நடத்தப்படுகிறது.
சரி அதில் கண்ணாடி
வலையல்களுக்கு ஏன் முக்கியத்துவம்? ஏன் கைநிறைய கண்ணாடி வலையல்கள் அணிவிக்கிறார்கள்?
தாயின் பனிக்குடநீரில்
கவலையின்|றி நீந்திக்கொண்டு இருந்த கருவில் இருக்கும் குழந்தை ஆறாம் மாதம் முதல் வெளி
உலக வெளி உலக சப்தங்கள் விசித்திரம் போன்ற சகலவிஷயங்களையும் கவனிக்க துவங்குகிறது.
தாயின் கையில்
அணியப்பெற்ற கண்னாடி வலையல்களின் ஒலி குழந்தைக்கு உற்சாகத்தையும் நரம்பு மண்டத்தை தூண்டுவதாகவும்
அமைகிறது.
கண்ணாடி வலையல்களின்
ஓசை குழந்தைக்கு பாதுகாப்பான உணர்வையும் நல்ல மனநிலையையும் தரும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல கருவுற்ற
இளம் பெண் நாள் முழுவதும் தாயின் நேரடி கண்காணிப்பில்தான் இருக்கவேண்டும். அப்போது
இந்த கண்ணாடி வலையல் ஓசைதான் அடுத்த அறையில் இருந்தாலும் தூங்கும்போதும் கருவுற்ற பெண்
இயல்பான நிலையில் இருப்பதை தாய்க்கு உணர்த்துகிறது.
நம் மரபு கலாச்சாரம்
பண்பாடு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.
நம் முன்னோர்களின்
ஒவ்வொரு செயலிலும் நம் ஆரோக்கியத்துக்கான மருத்துவம் இருந்தது. மூடநம்பிக்கை இல்லை.
புரிந்தவர் பயன்படுத்தி
பலனடைகிறார்கள்.
புரியாதவர்கள்
பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி
No comments:
Post a Comment