திருமண அழைப்பிதழ்களை
தாம்பூல தட்டில் வைத்து கொடுப்பது ஏன்?
திருமண அழைப்பிதழ்கள்
மட்டுமல்ல…
ஒருவர் மற்றவரிடம்
அரிசி நெல் என்று எந்த பொருட்கள் கொடுப்பதாக இருந்தாலும் மூங்கிலில் அல்லது பனை நாரில்
செய்த முறத்தில் (சுளவில்) வைத்துதான் கொடுப்பார்கள். பணமாயிருந்தால் தட்டில் வைத்துதான்
கொடுப்பார்கள்.
காரணம் கொடுப்பவரும்
வாங்குபவரும் பொருளாதாரத்தில் ஏற்றதாழ்வு இருந்தாலும் அந்த வேற்றுமை மனதில் கிடையாது
என்பதை உணர்த்தவே.
வெறுமனே கையால்
கொடுத்தால் கொடுப்பவர் கை மேலும் வாங்குபவர் கை கீழும் இருக்கும்.
இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்
யார் மனதிலும் தோன்றகூடாது என்பதற்காகவே எப்பொருளை கொடுத்தாலும் தட்டில் வைத்து கொடுக்கச்சொன்னார்கள்.
அப்போது கொடுப்பவர் பெறுபவர் இருவரது கையும் சமமாக இருக்கும்.
இதே முறைதான் அழைப்பிதழ்
கொடுக்கும்போதும் கடைபிடிக்கப்படுகிறது. மற்ற நேரத்தில் இதை கடைபிடிக்காவிட்டாலும்
இன்றுவரை காரணம் தெரியாமலே திருமண அழைப்பிதழ் கொடுக்கும்போது மட்டும் இது தொடர்கிறது.
அழைப்பிதழ் கொடுக்கும்போது
கூடவே தாம்பூலத்தட்டையும் எடுத்துச்செல்லுங்கள்.
நம் பண்பாடு கலாச்சாரம்
பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.
நம் மரபு பழக்கவழக்கம்
எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக உருவாக்கப்பட்டவையே.
தமிழன்
திமிரானவன்
சுந்தர்ஜி
No comments:
Post a Comment