Wednesday, December 25, 2024

கடவுள் வேறு… கடவுள் சிலைகள் வேறு…

 

 

கடவுள் வேறு… கடவுள் சிலைகள் வேறு…

மக்களை காக்கும் தெய்வசிலையையே திருடிச்செல்லும் போது,                   தன்னையே தற்காத்துக்கொள்ளாத தெய்வம் நம்மை எப்படி காக்கும்?

இதுதான் திராவிட பகுதறிவு – புளுத்தறிவு கேட்கும் கேள்வி.

இதுக்கு மெத்த படித்த ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஞானம் உள்ள நம்மில் அனேகம் பேருக்கு பதில் சொல்ல தெரியாது. மழுப்பலாகத்தான் சமாளிக்கமுடியும்.

ஆனால் உண்மை இதுதான்…

சிலைகளே கடவுள் அல்ல. மூர்த்தி வேறு மூர்த்திமான் வேறு.

என்ன புரியவில்லையா? புரியும்படியே சொல்கிறேன்.

மூர்த்தி என்பது கற்ச்சிலை. மூர்த்திமான் என்பது அந்த  கற்சிலையில் நாம் ஆவாகனம் செய்யும் தெய்வம்.

மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு. பல்பை பார்க்க முடியும். மின்சாரத்தை பார்க்க முடியாது.

பல்பில் மின்சாரம் பாயாது. அதனால் பல்பை திருடலாம்,ஷாக் அடிக்காது.. ஆனால் மின்சாரம் இல்லாமல் பல்பு எரியாது.

அதுபோல சிலையை திருடலாம். தெய்வம் தடுக்காது. திருடும் அவனால் அந்த சிலைக்கு தெய்வதன்மையை கொடுக்கமுடியாது.

அதுபோலத்தான் நம் பூஜை அறையில் இருக்கும் சுவாமி போட்டோக்களும் படங்களும் தெய்வதன்மை பெற்று இருக்கும்போது கடவுளாக வணங்கப்படுகிறது.

அந்த இடத்தை விட்டு கீழ் இறங்கிவிடால் அது வெறும் காகிதம் அல்லது படம்தான்.   

கிருபானந்த வாரியாரியார் சொற்பொழிவிலிருந்து… .

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடு என்கிறார் இராமலிங்க வள்ளலார்.

அதாவது கள்ளனுக்கும் கருணைகாட்டும் கடவுள் என்றார்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


No comments:

Post a Comment